Shivani Narayanan: இன்னும் கிட்ட கிட்ட வா மழையே.. க்யூட்டா ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்தமானவராக மாறினார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் அதற்கான போட்டோஷூட் செய்து அதை கையில் வைத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக சென்றால் தான் பட வாய்ப்பே வரும். ஆனால், இப்போது, கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும்,வித விதமான போட்டோவை எடுத்து இன்ஸ்டாவில் போட்டால் போதும்,வாய்ப்பு வீடு தேடி வரும் என்கிற நிலை வந்துள்ளது.

shivani narayanan instagram

ஷிவானி நாராயணன்: அப்படி இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராம் தான் சீரியல் வாய்ப்பை பெற்றுத்தந்தது. இவர் விஜய் டிவியில் பகல் நிலவு, சரவணன் மீனாட்சி போன்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

shivani narayanan instagram

வெள்ளித்திரையில்: அதன் மீண்டும் விஜய் டிவிக்கு வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீரியலில் ஹோம்லியாக புடவையுடன் வலம் வந்த இவர், பிக் பாஸ் வீட்டில், குட்டி டவுசரில் வலம் வந்தார். பின் நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரையில் முகம் காட்டாத ஷிவானி நாராயணன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாது மனைவியாக நடித்திருந்தார். வீட்ல விசேஷம், டிஎஸ்பி,நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்த ஷிவானி, பம்பர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

shivani narayanan instagram

செம க்யூட்: பெரியதாக படவாய்ப்பு எதுவும் இல்லாததால், பட வாய்ப்பை பெற கொஞ்சம் தோற்றத்தை மாறி போட்டோக்களை வெளியிட்டார். ஆனால், அது அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, இன்னும் கிட்ட கிட்ட வா மழையே பாடலுக்கு க்யூட்டா ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X