பிக் பாஸ் ஷிவானி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் மிரட்டலான டைட்டில் லுக் ரிலீஸ்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் வெற்றி மற்றும் ஷிவானி நாராயணன் நடிப்பில் உருவாகி வரும் பம்பர் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே ஷிவானிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ஷிவானி நாராயணன் விரைவில் சினிமா ஹீரோயினாக மாறி இளைஞர்களை கவர காத்திருக்கிறார்.

பல்பு பக்கத்திலேயே

பல்பு பக்கத்திலேயே

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனுக்கு குண்டு பல்பு என்றால் ரொம்ப பிடிக்கும் போல தனது இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட புகைப்படங்களை அந்த பல்பு பக்கத்திலேயே நின்றபடி எடுத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு புகைப்படங்களை பல்பு அருகே நின்றபடி எடுத்து லைக்குகளை குவித்து வருகிறார் ஷிவானி. வேறு யாரும் தனக்கு பல்பு கொடுத்து விடக் கூடாது என நினைக்கிறார் போல!

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வந்த ஷிவானிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ஷிவானி மேலும், இரு படங்களில் கமீட் ஆகி உள்ளார்.

பம்பர் படத்தில்

பம்பர் படத்தில்

ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், 8 தோட்டாக்கள் படத்தின் நாயகன் வெற்றி நடிக்கும் பம்பர் படத்திலும் நடிகை ஷிவானி ஹீரோயினாக மாறியுள்ளார். அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் லுக் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

96 பட இசையமைப்பாளர்

96 பட இசையமைப்பாளர்

கேரள லாட்டரியை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஷிவானி நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அப்போ பாடல்கள் எல்லாம் வேற லெவலில் ரசிகர்களின் மனதை கவரும் என்பதில் சந்தேகமில்லை என்பது கன்ஃபார்ம்.

Recommended Video

Fitness ரொம்ப ரொம்ப முக்கியம்' - Arun Vijay | Vishnu Vishal | Shivani | Tamil Filmibeat
ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

பிக் பாஸ் பிரபலங்களான ரைசா வில்சன், லாஸ்லியாவை தொடர்ந்து ஷிவானி நாராயணனும் ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஷிவானியை வாழ்த்தி வருகின்றனர். அதேபோல தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிசியாக போஸ்ட்களை போட்டு வருகிறார் ஷிவானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X