குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளர் சோமசேகர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன்முறையாக பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சீசனில் அதிகளவில் எந்தவொரு சண்டையும் போட்டுக் கொள்ளாமல், அன்பால் பிறரை அரவணைத்தவர் சோமசேகர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கேரளாவிற்கு சென்று குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

டிக்கெட் டு ஃபினாலே

டிக்கெட் டு ஃபினாலே

பிசிக்கல் டாஸ்க் மட்டுமே விளையாடி ஜெயிப்பது அல்ல பிக் பாஸ் நிகழ்ச்சி. அன்பு, மரியாதை, ஒழுக்கம், கோபம், விளையாட்டு, திறமை என மனித இயல்புகளை வெளிப்படுத்தியே விளையாட வேண்டிய ஒரு கேம் பிக் பாஸ். ஏகப்பட்ட அன்பை சம்பாதித்து வைத்திருந்த சோம், டிக்கெட் டு ஃபினாலேவில் அதிக புள்ளிகளுடன் முதல் நபராக ஃபினாலேவுக்கு சென்றார்.

நெவர் கிவ் அப்

நெவர் கிவ் அப்

நெவர் எவர் கிவ் அப் என்கிற கொள்கையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த சோமசேகர், இறுதி வரை வெளியேற்றப் படாமல் இருந்தார். கிராண்ட் ஃபினாலேவில் தான் சோமசேகர் எவிக்ட் செய்யப்பட்டார். டாப் 5 போட்டியாளராக சோமசேகர் தேர்வானதே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான்.

ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம்

பாலாஜி முருகதாஸ், ஷிவானி ரொமான்ஸ் தான் ஊர் முழுக்க பேச்சாக இருந்தது. ஆனால், சத்தமே இல்லாமல், ஒரு தலை ராகமாக சோமசேகர் ரம்யா பாண்டியனை காதலித்தார் என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது சாக்லெட் கவர் கொடுத்ததே ஒரு புரொபஸல் தான் என்றும் கொளுத்திப் போட்டு வருகின்றனர். சீக்கிரமே சோம் அதை தெளிவு படுத்தினால் நல்லா இருக்கும்.

இவரும் சைலன்ட்

இவரும் சைலன்ட்

எல்லா இறுதிப்போட்டியாளர்களும் பேசி வைத்திருப்பார்கள் போல தெரிகிறது. கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு, குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து விட்டு, பின்னர் மீடியாக்களில் தலையை கொடுக்கலாம் என எஸ்கேப் ஆகி வருகின்றனர். சீக்கிரமே லைவ்வுக்கு வருகிறேன், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என ஆரி, பாலா, ரியோவை போல சோமும் பதில் அளித்துள்ளார்.

குருவாயூரில் தரிசனம்

குருவாயூரில் தரிசனம்

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே முடிந்ததும் கேரளாவுக்கு சென்றுள்ள சோமசேகர், குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது, குருவாயூரில் இருந்து தனது ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் முதன் முறையாக பேசி போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

லவ்வுக்கு நன்றி

இறுதி வரை என்னை எவிக்ட் செய்யாமல் ஓட்டுப் போட்டு காப்பாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும், கிராண்ட் ஃபினாலே வாரத்திலும் எனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கும் ரொம்பவே நன்றி. உங்க லவ் பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை. கொஞ்ச நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இப்போ பரவாயில்லை. சீக்கிரமே லைவ் செஷனுக்கு வருகிறேன் என்றார்.

டேக் கிட்டு

டேக் கிட்டு

வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி சோமே.. உடம்பை பார்த்துக் கோங்க, உங்க வாழ்க்கை நினைச்ச படி இருக்கும், இன்னும் மேலே உயர வாழ்த்துக்கள், டேக் கிட்டு என ஏகப்பட்ட ரசிகர்கள் சோமசேகரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர். அன்பு கேங்கில் ஐக்கியமாகாமல் இருந்தால் நீங்க தான் டைட்டில் வின்னர் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X