"பிரீ அட்வைஸ் யாரும் கொடுக்க வேண்டாம்" - ரசிகருக்கு சாக்ஷி பதிலடி

Recommended Video

Bigg Boss : Sakshi & Sherin Lunch at Cheran House : மகள்களுக்கு Treat வைத்த சேரன்-வீடியோ

சென்னை: தொகுப்பாளினி, மாடல் அழகி, நடிப்பு என படு பிஸியாக இருந்த சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாளம் என ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் தோன்றியுள்ளார். இருப்பினும் அவரின் முகம் மக்களிடையே பரிச்சயமானது 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக தான். 'ராஜா ராணி' படத்தில் கூட ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். மேலும் ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்து மிகவும் பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற பிறகு தான். அங்கு பல தரப்பட்ட பிரச்சனைகளையும் , மன குழப்பங்களையும் சந்தித்த சாக்ஷி சுமார் 7 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். அங்கு இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு நல்ல ஒரு திரை பயணம் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சாக்ஷிக்கு கிடைத்துள்ளது.

ஜி. வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. அது மட்டுமின்றி ஆர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் 'டெடி' படத்திலும் நடித்து வருகிறார்

Bigg boss fame started her dubbing for Cindrella

விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஆக்சன்' படத்திற்கு டப் செய்து இருந்தார் சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஆக்சன்' படத்திற்கு டப் செய்யும் ஒரு புகைபடத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு டப் செய்வது போல் இருந்தது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி ட்ரெண்ட் ஆனது.

அதனை தொடர்ந்து சாக்ஷி அகர்வால், ராய் லட்சுமி நடிப்பில் வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோயின் சென்ரிக் திரில்லர் திரைப்படமான "சிண்ட்ரெல்லா" படத்தில் சாக்ஷி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு டப்பிங் செய்தும் உள்ளார். இந்த படத்திற்கு டப் செய்வதற்கு முன்பு படக்குழுவுடன் பூஜை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பூஜையின் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் சாக்ஷி அகர்வால்.

சாக்ஷி வெளியிட்ட அந்த பூஜையின் போது எடுத்து கொண்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதாவது பூஜையில் கலந்து கொள்வது எல்லாம் சரி தான் ஆனால் காலில் உள்ள ஸ்லிப்பரை கழட்டி விட்டு பூஜை செய்யவும் என்று போஸ்ட் செய்திருந்தார். அதற்கு சாக்ஷி சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதற்கு பெயர் ஸ்லிப்பர் அல்ல ஆன்கில் சாக்ஸ் (ankle socks). கடவுளுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். வாய்ப்பு கிடைத்தது என்று யார் வேண்டுமானாலும் பிரீ அட்வைஸ் கொடுக்க வேண்டாம் என்றும் பதிலளித்துள்ளார். சாக்ஷியின் இந்த பதிலடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் ராய் லட்சுமி தமிழில் கடைசியாக 'நீயா 2' படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த ஹீரோயின் சென்ரிக் திரில்லர் திரைப்படம் நிச்சயம் அவருக்கு மேலும் பல வாய்ப்புகளை தமிழ் சினிமாவில் தேடி தரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X