நீதிபதி மகனுடன் அடிதடி.. தம்பிக்காக வீதியில் இறங்கிய பிக்பாஸ் தர்ஷன்.. போதையா? நடந்தது என்ன?
சென்னை: நடிகரும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் தமிழ் சினிமாவில் மிளிர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் மூலம் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகமான தர்ஷன் இதுவரை தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது தர்ஷனைச் சுற்றி ஏதாவது பிரச்னை வந்து கொண்டே உள்ளது. அப்படியான பிரச்னையில் தான் இப்போது உள்ளார் தர்ஷன்.
தர்ஷன் இதுவரை தமிழில் இரண்டு படங்களான கூகுள் குட்டப்பா மற்றும் நாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். இதில் நாடு படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் தர்ஷன். தர்ஷன் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆவதைக் காட்டிலும், ஏதாவது சர்ச்சையில் சிக்கியே அதிகம் ரீச் ஆகிறார்.ஏற்கனவே நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாகக் கூறி, ஏமாற்றி விட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்படியான நிலையில் தனது வீட்டிற்கு அருகே நீதிபதி மகன் ஆத்திச்சூடியுடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கண்ணீருடன் பேசினார். அதாவது, " நான் ஜிம் போய்விட்டு வந்தேன். வீட்டு வாசலில் கார் நின்று கொண்டிருந்தது. அது யாருடையது எனத் தெரியாமல், அருகில் இருந்த கடைகள் எல்லாம் போய் விசாரித்தேன். எனது தம்பி அருகில் உள்ள டீ கடையில் விசாரித்தார். அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் அவர்களது கார் எனக் கூறினார்கள்.
தர்ஷன்: அவர்களை காரை எடுக்கச் சொன்னோம். அதற்கு அவர்கள் பிக் பாஸ் போய்ட்டு வந்தா அவன் என்ன பெரிய இவனா எனக் கேட்டார்கள். அதற்கு என் தம்பி, மரியாதையாகத்தான் பேசுகிறோம், ஏன் இப்படி பேசுகிறீர்கள் எனக் கேட்டார். உடனே அந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண் என் தம்பி மீது அவர் குடித்துக் கொண்டு இருந்த காபியை மேலே ஊற்றினார்கள். அந்த பெண்ணின் கணவர் எனது தம்பியைக் கீழே தள்ளி, என் தம்பி மீது அமர்ந்து கொண்டு அவனைத் தாக்கிக் கொண்டு இருந்தார்.

அடிதடி: என் தம்பியை ஒருவர் தாக்கும்போது ஒரு அண்ணனாக நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். நான் போய் அவரைத் தடுத்தேன். அவர் எனது முகங்களில் அவரது நகங்களால் கீறிவிட்டார். ( அழுது கொண்டே காயங்களைக் காட்டுகிறார்) ஆனால் அவர் இப்போது நான் அவரைத் தள்ளிவிட்டேன் எனக் கூறுகிறார். மேலும் நான் நீதிபதியின் மகன் எனக்கு என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் என மிரட்டுகிறார்" எனக் கூறுகிறார்.

போதை: இது தொடர்பாக நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி கூறும்போது, நடிகர் என்பதால் எனது மனைவி மற்றும் மாமியார் நலம் விசாரித்தார்கள். கரை எடுப்பதாகவும் கூறினோம். ஆனால் அவர்கள் முதலில் மரியாதைக் குறைவாக பேசினார்கள். எனது மனைவியின் கையை முறுக்கினார்கள். தடுக்கப் போன என்னை கீழே தள்ளி அடித்தார்கள் என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். அதேபோல் ஆத்திச்சூடியின் மாமியார் கூறுகையில், தர்ஷன் போதைப்பொருள் எடுத்துள்ளார் என சந்தேகமாக உள்ளது. ஒரு சாதாரண மனிதன் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார். ஆனால் தர்ஷனின் நடவடிக்கைகள் அப்படி இல்லை. பெண்கள் எனக் கூடப் பார்க்காமல் மரியாதைக் குறைவாக பேசினார்கள். இப்படி பேச வேண்டாம் எனக் கூறிய எனது மாப்பிள்ளையைத் தாக்கினார்கள்" எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











