விஜே பார்வதி சொந்த ஊரில் கம்ருதீன்.. இரண்டு பேரும் வெளுத்து கட்டுறாங்க.. வீடியோவை பாருங்க

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் பிரபலமானவர்கள். இரண்டு பேருமே ரெட் கார்டு பெற்று வெளியேறிவிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்களுக்கிடையேயான உறவு தொடர்கிறது. அந்தவகையில் தற்போது பாருவின் சொந்த ஊருக்கு கம்ருதீன் சென்றிருக்கிறார். அதுதொடர்பான வீடியோவும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்பை கூட்டியது. அந்த சீசனில் களமிறக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் சோஷியல் மீடியா மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள். அவர்களால் தேவையான கன்டென்ட்டை கொடுக்க முடியுமா என்று எல்லோரும் யோசித்த சூழலில்; ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கன்டென்ட்டை போட்டியாளர்கள் கொடுத்தார்கள். வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், திவ்யா கணேஷ் என பலர் அப்படி செய்தாலும் இரண்டு பேர்தான் ரொம்பவே ஃபேமஸ் ஆனார்கள்.

Bigg Boss Fame VJ Parvathy and Kamruddin s Madurai Video Goes Viral
Photo Credit:

விஜே பாரு, கம்ருதீன்: அவர்கள் விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். சீசன் ஆரம்பித்த சில வாரங்கள் அவர்களுக்கிடையே பெரிதாக எதுவும் செட் ஆகவில்லை. ஆனால் போகப்போக என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் அதீத நெருக்கமானார்கள். முதல் சீசனில் ஓவியா - ஆரவ் ஜோடி எப்படி பேசப்பட்டதோ அதே அளவுக்கு இவர்களும் பேசப்பட்டார்கள். நட்புக்கும் மேலே ஒரு உறவு எங்களுக்குள் இருக்கிறது என்றும் பாரு கூறியிருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்குள் செய்த அட்ராசிட்டிகள் எல்லாம் கணக்கில் இல்லாதவை.

Also Read
கவர்னர் பிஹேவ் பண்றது சகிக்கல.. விஜய் முதலமைச்சராக வேண்டும்.. திடீர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ்!
கவர்னர் பிஹேவ் பண்றது சகிக்கல.. விஜய் முதலமைச்சராக வேண்டும்.. திடீர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ்!

ரெட் கார்டு பெற்ற இருவர்: ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு அட்வைஸ் செய்வதையே பெரிய வேலையாகவும் பார்த்தார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி. இருப்பினும் அவர்கள் அடங்கவில்லை. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை காரிலிருந்து பார்வதி எட்டி உதைத்தார். அதற்கு கம்ருதீனும் உதவி செய்தார். இரண்டு பேரும் அப்படி ஒரு அத்துமீறிய செயலை செய்ததால் சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக்கும் வந்துவிட்டது. மருத்துவர்களின் உதவியோடு நல்வாய்ப்பாக நார்மலுக்கு வந்தார்.

விஜே பாரு, கம்ருதீன் செய்ததை பார்த்து ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் கொதிப்படைந்தார்கள். நிகழ்ச்சி குழுவினரே உச்சக்கட்ட கடுப்பாகி இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுத்து ஜோடியாக வெளியேற்றினார்கள். வெளியே வந்த பிறகு இரண்டு பேருக்குமான உறவு கண்டிப்பாக நீடிக்காது என்றுதான் பலரும் சொன்னார்கள். ஆனால் கம்ருதீனோ விஜே பார்வதிக்கு பேட்டியே கொடுத்தார். பார்வதியுடன் பழகக்கூடாது என்று சொல்பவர்களின் பழக்கத்தைத்தான் நான் முறித்துக்கொள்வேன் எனவும் அதிரடியாக கூறியிருந்தார்.

ட்ரெண்டாகும் வீடியோ: பல இடங்களுக்கு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜே பார்வதியின் சொந்த ஊரான மதுரைக்கு கம்ருதீனும் சென்றிருக்கிறார். அங்கே காசிமாயன் ஹோட்டலுக்கு சென்று இரண்டு பேரும் விதவிதமாக சாப்பிட்டிருக்கிறார்கள். அதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஜே பார்வதி, "மதுரக்காரங்க அன்பை சாப்பாட்டில் காட்டுவோம்ல.. மதுரை காசிமாயன் கடை" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X