விஜே பார்வதிக்கு சேட்டையை பார்த்தீங்களா.. ரெட் கார்டு வாங்கியதற்கு கேக் வெட்டி கொண்டாட்டமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு வாங்கிய விவகாரம் அந்த சமயத்தில் பெரிய பேசுபொருளானது. அனைவருமே அவர்கள் இரண்டு பேருக்கும் எதிரான கருத்தை பதிவு செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் பார்வதியும், கம்ருதீனும் டச்சில்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கொண்ட்டாட்டத்தின்போது ரெட் கார்டு என எழுதப்பட்ட கேக் வெட்டிய அவரது வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த வருடத்தில் நடந்தது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். திவ்யா கணேஷ் அந்த சீசனின் டைட்டில் வின்னரானாலும்; விஜே பார்வதியும், கம்ருதீனும்தான் சென்சேஷனலாக மாறினார்கள். டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சாண்ட்ராவை காரிலிருந்து பாரு எட்டி உதைக்க; கம்மு அதற்கு உதவி செய்தார். அதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள்.

Bigg Boss Fame VJ Parvathy Cuts Red Card Cake Viral Video Sparks Reactions Online
Photo Credit:

வெல்ல வேண்டியவர்கள்: கிட்டத்தட்ட 90 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் அவர்கள் இருந்தார்கள். கண்டிப்பாக அவர்கள் இரண்டு பேரில் ஒருவர்தான் டைட்டிலை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பலரும் கருதினார்கள். அதிலும் கம்ருதீனுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் ரெட் கார்டு வாங்கிவிட்டார். பார்வதியால்தான் கம்ருதீனுக்கு இந்த நிலைமை உருவாகிவிட்டதாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஓபனாகவே சொன்னார்கள். அதுவும், அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, 'பார்வதியுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்' என கானா வினோத் அட்வைஸ் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read
ஃபிலிம்ஃபேர் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்.. எல்லா ஹீரோக்களையும் விளாசிய ப்ளூ சட்டை மாறன்
ஃபிலிம்ஃபேர் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்.. எல்லா ஹீரோக்களையும் விளாசிய ப்ளூ சட்டை மாறன்

கம்ருதீன் சொன்னது: இருப்பினும் பார்வதிக்கும், கம்ருதீனுக்குமிடையேயான ரிலேஷன்ஷிப் நட்பை தாண்டி சென்றுவிட்டதால் இன்னமும் டச்சில்தான் இருக்கிறார்கள். அண்மையில்கூட பார்வதியுடனான உரையாடலின்போது பேசிய கம்ருதீன், 'காதலுக்கும், காமத்துக்கும் ஒரு கோடுதான் இருக்கிறது. நான் கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் தெய்வீக காதலில்தான் இருந்தேன். அதேபோல் வெளியே போன பிறகு பார்வதியோடு டச்ல இருக்காதனு சொன்னவங்களோடுதான் நான் டச்சில் இருக்கமாட்டேன்' என சொல்லியிருந்தார்.

வம்பிழுத்த விஜே பார்வதி: அதேபோல் அந்த உரையாடலில் பேசிய பார்வதியோ, "நாம் காஜி கப்பிள் என்று சொன்னதை கேட்டு வெளியே வந்ததும் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என்னை போலி பெண்ணியவாதி என சொல்கிறார்கள். ஆனால் நான் ஆர்த்தாடக்ஸ் குடும்பத்திலிருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் நான்தான் அதைப் பற்றி பேச வேண்டும். நாம் மோதலில்தான் ஆரம்பித்தோம். சமீபத்தில்கூட நீங்கள் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது டைட்டில் வின்னர் (திவ்யா கணேஷ்) என்ன கம்மு கர்சீஃப்பை எடுத்துக்கொடுக்கிற வெளியே உங்களை திட்டமாட்டாங்களானு கேட்கிறாங்க. எதுக்கு இதெல்லாம். நான்தான் உங்கள் வம்புக்கே வருவது இல்லையே" என திவ்யா கணேஷை சீண்டியிருந்தார்.

கேக் வெட்டிய பார்வதி: இப்படி அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து தங்களது ரிலேஷன்ஷிப்பை வளர்த்துவருகிறார்கள். இந்நிலையில் விஜே பார்வதியின் வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது தனது தோழர்கள் மற்றும் தோழிகளுடன் ஒரு கொண்டாட்டத்துக்காக கேக் வெட்டினார் பார்வதி. அந்த கேக்கில் 'ஆன் தி ரெட் கார்டு' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டுகையில், 'ரெட் கார்டே' என கத்தியபடி வெட்டினார் பாரு. இதனைப் பார்த்த ரசிகர்கள், விஜே பாருவுக்கு சேட்டையை பாருங்க. ரெட் கார்டு வாங்கியதை இப்படி கேக் வெட்டி கொண்டாடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X