தாய்லாந்து வீதியில் கெட்ட ஆட்டம் போடும் விஜே பார்வதி.. என்ன செஞ்சுருக்காங்க பாருங்க?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் பங்கேற்று ரெட் கார்டு பெற்று பிரபலமானவர் விஜே பார்வதி. சக போட்டியாளர் சான்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்ததால் அவரும், கம்ருதீனும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பாரு; முத்து என்கிற காட்டான் வெப் சிரீஸில் நடித்தார். மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் தாய்லாந்தில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாக பயணத்தை ஆரம்பித்து பிறகு சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவுக்கு வந்தவர் விஜே பார்வதி. முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனிலும் பங்கேற்றார். போட்டியின் முதல் நாளிலிருந்தே மிக சிறப்பாகவே விளையாண்டார். திவாகருடனான அண்ணன் பாசம், கம்ருதீனுடனான நட்புக்கும் மேலே இருக்கும் உறவு என வீட்டில் ஆக்டிவ்வாகவே இருந்தார்.

Bigg Boss Fame VJ Parvathy s Thailand Dance Video Goes Viral on Social Media
Photo Credit:

ரெட் கார்டு பெற்ற பார்வதி: கம்ருதீனுடன் அவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டதையடுத்து பல வேலைகளில் ஈடுபட்டு கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டார். அனைத்துக்கும் உச்சக்கட்டமாக சக போட்டியாளர் சான்ட்ராவை டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது காரிலிருந்து எட்டி உதைத்து கீழே தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவருக்கு, அவருக்கு உதவி செய்த கம்ருதீனுக்கும் உடனடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் டைட்டில் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்ட இரண்டு பேருமே பாதியிலேயே வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.

Also Read
விஜய் யோசிச்சுதான் செய்வாரு.. முதலமைச்சரின் முதல் லக்கி ஜோடி சங்கவி சொல்றதை கேளுங்க
விஜய் யோசிச்சுதான் செய்வாரு.. முதலமைச்சரின் முதல் லக்கி ஜோடி சங்கவி சொல்றதை கேளுங்க

வெளியே வந்தும் நெருக்கம்தான்: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கம்ருதீனுக்கும், விஜே பார்வதிக்கும் எந்த டச்சும் இருக்காது என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அவர்களோ நிகழ்ச்சி முடிந்தும் பழையபடி நெருக்கமாகவே இருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் ஒன்றாக செல்கிறார்கள். மேலும் பார்வதியுடன் பழகாதே என்று யாராவது என்னிடம் சொன்னால்; நான் அவர்களுடைய பழக்கத்தைத்தான் நிறுத்துவேன் என்று ஒரு பேட்டியில் கம்ருதீன் ஓபனாக சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப் சீரிஸில் பார்வதி: பார்வதிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் பாரு. அவர் தன்னுடைய ரோலுக்கு நியாயம் சேர்க்கும்படி அவ்வளவு எதார்த்தமாக நடித்திருந்தார். பலரும் பார்வதிக்கு தங்களது பாராட்டை தெரிவித்தார்கள். இது தவிர்த்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் தெரிகிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: அதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜே பார்வதி தனது தோழர்கள் மற்றும் தோழிகளுடன் தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கே இரவில் வீதியில் தனது தோஸ்த்துக்களுடன் சூப்பாராக ஆட்டம் போட்டிருக்கும் வீடியோவை இன்ஸ்டாவிலும் ஷேர் செய்திருக்கிறார்கள். அதில் பார்வதி உச்சக்கட்ட பரவசத்தோடு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நடனம் ஆடுகிறார். இதை பார்த்த ரசிகர்களோ பார்வதி வாழ்க்கையை என்ஜாய் செய்றாங்க ப்பா என்று ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X