Actress Yashika Anand: சிங்கப்பூருக்கு ஜாலி ட்ரிப் போன யாஷிகா ஆனந்த்!
சென்னை: Yashika Anand(நடிகை யாஷிகா ஆனந்த்தின் அழகிய போட்டோ) நடிகை யாஷிகா ஆனந்த் சிங்கப்பூரில் ஜாலியாக தனது விடுமுறையை கழித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த்.
2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

யாஷிகா ஆனந்த்: அந்த படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்க்கு தனி ரசிகர்கள் இருந்தனர் . பின் அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து வெகுஜன மக்களுக்கும் பிடித்த நடிகையானார்.
சாலை விபத்து: இதையடுத்து, கடந்த 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மூன்று பிரிவில் வழக்கு: கார் ஓட்டிய யாஷிகாவிற்கு பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் இருந்த யாஷிகா குணமடைந்து வர ஒருபுறம் ரசிகர்கள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் விபத்தின் அடிப்படையில் யாஷிகா மீது, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கைவசம் உள்ள படம்: இந்த விபத்தில் இருந்து பூரண குணமடைந்த யாஷிகா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Limited edition: இந்நிலையில், சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று இருக்கும் யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் படத்தில் விதவிதமான போட்டோவை அப்லோடு செய்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, Limited edition என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், நீங்கள் Limited edition இல்லை, நீங்கள் யாருடனும் ஒப்பிட முடியாத Rare edition என பதிவிட்டு தங்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











