மூன்றாக உடைந்த பிக் பாஸ் குடும்பம்.. எதிரெதிர் அணியில் கவி - லியா.. தனி டிராக்கில் சாக்‌ஷி, ஷெரின்!

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் மூன்று அணிகளாக பிரிந்து விட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Recommended Video

Bigg Boss : Sakshi & Sherin Lunch at Cheran House : மகள்களுக்கு Treat வைத்த சேரன்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் மூன்று அணிகளாக பிரிந்து விட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கவினும், லாஸ்லியாவும் எதிரெதிர் அணியில் இருப்பது அவர்களை சோகமடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு சீசன்களை விட இம்முறை மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது பிக் பாஸ். கடினமான டாஸ்குக்குகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும், பரபரப்பான கண்டெண்டுகள் கொடுத்து போட்டியாளர்கள் அசத்தி விட்டனர். ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் மத்தியில் மோதல் முத்தியபோது, வீட்டில் இரண்டு அணிகள் உருவானது. பின்னர் அனைவரும் சமாதானமாகி ஒன்றானார்கள்.

தற்போது நிகழ்ச்சி முடிந்து விட்ட நிலையில், வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் மீண்டும் பல அணிகளாகப் பிரிந்து காணப்படுகின்றனர்.

ரசிக்க வைத்த பாய்ஸ் கேங்

ரசிக்க வைத்த பாய்ஸ் கேங்

பிக் பாஸ் வீட்டில் பெரிதும் பேசப்பட்டது கவின், சாண்டி, முகென் மற்றும் தர்ஷனின் பாய்ஸ் கேங் தான். இதில் ஷெரினைச் சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக லாஸ்லியாவைச் சேர்த்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் குருநாதா டீ சர்ட்டைப் போட்டுக் கொண்டு செய்த சேட்டைகள் ரசிக்கும்படி இருந்தது.

சாண்டி கொடுத்த விருந்து

சாண்டி கொடுத்த விருந்து

இந்த அணியில் இருந்த கவினும், லாஸ்லியாவும் காதலித்தது உலகறிந்த விசயம் தான். எனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், இவர்கள் தான் முதலில் சந்தித்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், சாண்டி அளித்த விருந்தில் பாய்ஸ் அணி கலந்து கொண்டது. லாஸ்லியா மட்டும் அதில் பங்கேற்கவில்லை.

லாஸ்லியாவுக்கு பதில் அபிராமி

லாஸ்லியாவுக்கு பதில் அபிராமி

அவருக்குப் பதில் அபிராமி அதில் கலந்து கொண்டார். லாஸ்லியா தனது குடும்பத்தினருடன் இருந்ததால் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் சாண்டியின் நடன பள்ளிக்கு சென்று லாஸ்லியா டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வனிதா வீட்டு விசேஷம்

இதேபோல், வனிதா வீட்டில் நடந்த விஷேசத்தில் சேரன், லாஸ்லியா மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். லாஸ்லியா தனியாகச் சென்று அபிராமியைச் சந்தித்துள்ளார். இதேபோல் ஷெரினும், சாக்‌ஷியும் சேரனை வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஷெரின் - சாக்ஷி

இது தவிர ஷெரினும், சாக்‌ஷியும் தனியாக ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பிக் பாஸ் குடும்பம் இரண்டு மூன்றாக பிரிந்து விட்டது நன்கு புரிகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் வீட்டில் சேரப்பா என உருகிய சேரன் வீட்டிற்கும் லாஸ்லியா போகவில்லை. அண்ணன் என பாசம் கொண்டாடிய சாண்டியின் விருந்திலும் கலந்து கொள்ளவில்லை. காதலில் கசிந்துருகிய கவினையும் அவர் சந்திக்கவில்லை. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X