அடடா.. சீக்கிரமே கல்யாண சாப்பாடு போட ரெடியான அமீர் - பாவனி.. திருமணம் எப்போ தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது இதை பல தருணங்களில் அமீர் வெளிப்படுத்தினார். பாவனியின் முதல் கணவர் தற்கொலை செய்ததை அந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் பாவனி. சக ஹவுஸ்மேட்ஸ் இடையில் இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்திய நிலையில் அமீருக்கு மட்டும் காதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமீரின் காதலை ஏற்க முடியாமல் பாவனி தொடர்ந்து மௌனம் சாதித்தார். ஆனால் அமீரின் தொடர் முயற்சிகள் காரணமாக அவரது அன்பை புரிந்து கொண்ட பாவனி அவரது காதலையும் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் இணைந்து டைட்டிலையும் வென்றனர். தொடர்ந்து அந்த மேடையிலேயே அமீரின் காதலையும் ஏற்றுக் கொண்டார் பாவனி. அமீரின் இயக்கத்தில் பாவனின் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டில் திருமணம் செய்வதாக கடந்த ஆண்டிலேயே அறிவித்திருந்தனர். தற்போது தங்களது திருமணம் குறித்து இவர்கள் பேசியுள்ளனர். இதனால் இவர்களது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Bigg boss famous Amir amp amp Pavni announced thier marriage date in their recent interview

அமீர் -பாவனி ஜோடி: நடன இயக்குநர் அமீர் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை பாவனி இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்தான் சந்தித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலேயே பாவனி மீதான தன்னுடைய ஈர்ப்பை அடுத்தடுத்த தருணங்களில் வெளிப்படுத்தினார் அமீர். தன்னுடைய முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் அமீரின் காதலை ஏற்க முடியாமல் மௌனம் சாதித்தார் பாவனி. ஆனாலும் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை அமீர். தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வந்தார். இந்த ஜோடி, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று டைட்டிலை வெற்றிக் கொண்டது.

டைட்டிலை வெற்றி கொண்ட ஜோடி: தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் மேடையிலேயே அமீரின் காதலை உறுதி செய்தார் பாவனி. இவர்கள் இருவரும் ஜோடி சேர வேண்டும் என்று முன்னதாக எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை கொடுத்தது. இந்நிலையில் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்தே சென்றனர். திருமணம் குறித்து கடந்த ஆண்டிலேயே பேசிய அமீர் மற்றும் பாவனி, இந்த ஆண்டில் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்துக் கொண்ட இவர்கள் தங்களது திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

முதல் கணவரை மறக்கவில்லை: தான் ஒரு நடிகனாக மாறுவதற்காக தான் முயற்சித்து வருவதாகவும் தன்னுடைய தேவைகள் அனைத்தையும் பாவனிதான் தற்போது பார்த்து வருவதாகவும் அமீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய லுக் உள்ளிட்ட அனைத்தையும் பாவனிதான் மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாவனி தன்னிடம் சண்டை போட்டாலும் தான் அதை கண்டு கொள்ளாமல் இருப்பேன் என்று இதையடுத்து பாவனி தானே சமாதானமடைந்து விடுவார் என்றும் அமீர் தெரிவித்துள்ளார். தான் எதற்குமே சண்டை போட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய முதல் கணவரை பாவனி இன்னும் மறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமண தேதியை அறிவித்த அமீர்: இதனிடையே இந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி தாங்கள் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக அமீர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பாவனி தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். காரணம் அது அவரது பிறந்தநாநள் என்பதுதான். அவரது பிறந்தநாளிலேயே தங்களின் திருமணமும் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை அமீர் வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக இவர்கள் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துவந்த ரசிகர்கள், இதைக் கேட்டவுடன் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X