Urfi Javed: சூர்ய கிரகத்தை இடுப்பில் உருட்டி விட்ட உர்ஃபி ஜாவேத்.. கடுப்பான பேன்ஸ்!
சென்னை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை நோக்கமாக வைத்துள்ளார். இவரது அளவுக்கு மீறிய கவர்ச்சியால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத உர்ஃபி, தற்போது வித்தியாசமான உடையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் என இன்றைய இளசுகளை சிந்திக்க விடாமல் இவற்றுக்குள்ளே அவர்களை மூழ்கடித்து விடுகிறது. அது தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும், சிலர் பணம் சம்பாதிக்கும் தளமாக பார்ப்பதால், இதில் லைக்குகளை பெற்று பணத்தை அள்ளி வருகின்றனர்.

உர்ஃபி ஜாவேத்: அப்படி எதையாவது செய்து லைக்குகளை பெரும் நடிகைகள் வரிசையில் முதலாவதாக இருக்கிறார் நடிகை உர்ஃபி ஜாவேத். இவரை முழுசான உடை அணிந்து யாரும் பார்த்து இருக்கவே முடியாது. வித்தியாசமாக எதையோ செய்கிறேன் என்று, செல்போனை மார்பின் மீது தொங்கவிடுவது, டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் விதவிதமான போஸ் கொடுப்பது என இஷ்டத்திற்கு அலப்பறை கொடுத்து வருகிறார். இவர் என்னத்தான் கன்றாவியாக டிரஸ் போட்டாலும், இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மணியும் இதை தொடர்ந்து செய்து வருகிறார்.
வழக்குப்பதிவு: அண்மையில் இவர், ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றியதாக மும்பை போலீஸார் கைது செய்ததாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் விளம்பரத்துக்காக இதுபோன்ற கைது நாடகத்தை உர்ஃபி ஜாவேத் செய்தார் என தெரியவந்ததை அடுத்து, அம்மணி மீது, மும்பை ஓஷிவாரா போலீஸார் 171, 419, 500, 34 ஐபிசி பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இதைப்பற்றி கவலைப்படாத உர்ஃபி, வழக்கு எல்லாம் எனக்கு தூசி என தன் இஷ்டத்திற்கு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, இவர் வித்தியாசமான உடையில் வருகிறேன் என்று, சூரிய கிரகத்தை இடுப்பில் சுத்தவிட்டுள்ளார். அதாவது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,வடிவேலு ஒரு படத்தில் இடுப்பில் கூடையை கட்டிக்கொண்டு வருவாரே அது போல, கறுப்பு நிற உடையில், இடுப்பில், கண்ணாடி குடுவையை கட்டிக்கொண்டு, அதற்குள் சூர்ய கிரகத்தை வைத்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், லைட் போட்டதும் அந்த சூர்ய கிரகணம் சுற்றுவதுதான். இதைப்பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் பார்ப்பது எங்க தலையெழுத்து என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நான் ஆபாச நடிகையா: அண்மையில் இந்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சில விஷமிகள் பதிவிட்டனர். அதனை பார்த்த என் குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர். என் சொந்தக்காரர்கள் என்னை ஆபாச நடிகையாக பார்க்கின்றனர். சிலர் இன்னமும் தன்னை Porn Star என்றே அழைக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுது பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications