Vikraman: மாலை மாற்றி மோதிரமும் போட்டு.. பிக்பாஸ் ஃபேமஸ் விக்ரமன் திடீர் திருமணம்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசன் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 6 பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற அசீம் டைட்டில் வின்னரான நிலையில், ரசிகர்களை கவர்ந்த விக்ரமன் ரன்னர் அப்பாக மாறினார்.

இந்த சீசனின் வெற்றிக்கு இவர்களுக்குள் நிலவிய போட்டியும் காரணமாக அமைந்தது. விரைவில் விக்ரமன் தமிழில் ஹீரோவாக களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோலிவுட்டில் உதவி இயக்குநராக செயல்பட்டுவரும் ப்ரீத்தி கரிகாலன் என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

bigg boss 6 vikraman preethi karikalan


பிக்பாஸ் ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 8வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வழிநடத்திவந்த உலகநாயகன் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனிலிருந்து தற்போது விலகியுள்ளார். அவரையடுத்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ளார். அவரது ஹோஸ்டிங் மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரயிறுதியிலும் இவரை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சையை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். கடந்த வாரமும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை அவர் சிறப்பாக வழங்கினார்.

பிக்பாஸ் 6 போட்டியாளர் விக்ரமன்: இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசன் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சனங்கள் அதிகமாக வைக்கப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதற்கு முந்தைய 6வது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. கடந்த 6வது சீசனின் அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்த விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காமல், தொடர்ந்து நெகட்டிவ்வான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அசீமிற்கு டைட்டில் வின்னராகும் வாய்ப்பு கிடைத்தது.

விக்ரமன் திடீர் திருமணம்: இதுகுறித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய விக்ரமன் தாக்கி பேசியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது விக்ரமன் திடீர் திருமணம் செய்துள்ளார். இதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், அன்பும் அறனும் என்று கேப்ஷனில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விக்ரமன் திருமணம் செய்துள்ள ப்ரீத்தி கரிகாலன், சினிமாவில் உதவி இயக்குநராக செயல்பட்டு வருபவர். இவர் பார்த்திபனிடம் உதவி இயகிகுநராக கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களில் செயல்பட்டுள்ளதாகவும் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

உதவி இயக்குநரை மணந்த விக்ரமன்: சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரீத்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நண்பர்களாக பழகி பின்பு காதலர்களாக மாறியதாகவும் விக்ரமன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ப்ரீத்தியின் விருப்பப்படி தாலி கட்டிக் கொண்ட நிலையில், மோதிரமும் மாற்றி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, கரு பழனியப்பன் மற்றும் பிக்பாஸ் நண்பர்கள் கலந்துக் கொண்டனர். விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவுள்ளதாக விக்ரமன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X