உண்மையா ஆஜீத் தான் ஜெயிச்சானா.. ஷோவை பார்க்கும் போது கூட தெரியலயே.. சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!
சென்னை: தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் இந்த முறை சோமசேகர் போட்டிக்கு கூட தேர்வாகவில்லை.
எப்படியோ நல்லா விளையாட ஆரம்பித்ததால், அடுத்த வாரம் ஒட்டுக்கள் கிடைத்து விடும் என அவரை அனுப்பாமல், ஆஜீத்தை காப்பாற்ற பிக் பாஸ் ஒரு நல்ல முயற்சி எடுத்துள்ளார்.
கேபி தான நல்லா விளையாடுனாங்க, எப்படி ஆஜீத் ஜெயிச்சான். சந்தேகமா இருக்கே என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தலைவர் போட்டிக்கு
தலைவர் போட்டிக்கு தகுதியான மூன்று நபர்களை தேர்வு செய்ய பிக் பாஸ் சொன்னதும், பாலா மட்டுமே சூப்பரா எழுந்து வந்து, தன்னை விட சிறப்பாக விளையாடிய சோமசேகரை நாமினேட் செய்தார். ஆனால், மற்ற போட்டியாளர்கள் சோமசேகரை ஓரங்கட்டி விட்டு, கேபி, ஆஜீத் மற்றும் நிஷாவை நாமினேட் செய்தனர்.

எப்படியும் சேஃப் தான்
கடந்த வாரம் ஊசலாடிக் கொண்டிருந்த சோமசேகரின் உயிர் இந்த வாரம் மட்டுமல்ல அடுத்த வாரமும் சேஃப் என்று தான் தோன்றுகிறது. பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பக்காவாக விளையாடி ஏகப்பட்ட பெண்களின் மனங்களையும் ஈர்த்து விட்டார் சோமசேகர். ரம்யாவுடன் ஜோடி போட்டு செய்த அரட்டை, ஐஸ்வர்யாவுக்கு புரபோஸ் என கலக்கி விட்டார்.

தேவையில்லாத ஆணி
பிக் பாஸ் எடிட்டர், இன்னைக்கு ஏகப்பட்ட சீன்களை காட்ட வேண்டும் என்பதால், தேவையில்லாத ஆணிகளை கட கடவென கட் பண்ணிட்டு தலைவர் டாஸ்க்கில் தேர்வானவர்கள் பெயர்களை போட்டியாளர்கள் முழுமையாக சொல்வதற்கு முன்பாகவே அந்த சீன் முடிந்தது போல, நிஷா, கேபி மற்றும் ஆஜீத் தேர்வானார்கள்.

நல்லா விளையாடிய கேபி
ஜெம்ஸ் மிட்டாய் டாஸ்க்கில் கேபி நல்லா விளையாட வில்லை என்பது தெரிந்தது. ஆனால், பலூன் உடைக்கும் போட்டியில், கொக்கு மாதிரி இருக்கும் கேபி நல்லாத்தான் விளையாடியது. பலரும் கேபிக்கு தான் சப்போர்ட் பண்ணி பாராட்டினார்கள். பிக் பாஸ் ரசிகர்களும், அடுத்த வாரம் கேபி கேப்டனாவார் என நம்பினர்.

செம ட்விஸ்ட்
ஆனால், கடைசியாக காயின்களை எண்ணும் போது, செம ட்விஸ்ட்டாக ஆஜீத் தான் வெற்றி பெற்றார் என ஆரி அறிவித்து விட்டார். அதிக டோக்கன்களை அள்ளியது ஆஜீத் தான் என்றும் எல்லா போட்டியாளர்கள் சொல்ல, ஆஜீத் அடுத்த வாரத்திற்கான தலைவராக மாறிவிட்டார்.

நல்லா ஏமாத்துறாங்க
ஆஜீத் ஹைட்டே பத்தாமல், பலூன் உடைக்க எகிறி எகிறி கஷ்டப்பட்டதை நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள், நல்லாவே ஏமாத்துறாங்கப்பா.. ஏற்கனவே ஆஜீத்தை காப்பாத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பிக் பாஸ் கொண்டு வந்தார். இப்போ அடுத்த வாரம் அந்த மிக்சர் தின்னியை வீட்டுக்கு அனுப்ப விடாமல் காப்பாற்ற இப்படி ஏமாத்துறாங்க என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அப்ப பாலாவுக்கு பணிவிடை
பாலாவுக்கு மைக் மாட்டி விடும் பையனாக பிக் பாஸ் வீட்டில் வேலை பார்த்து வரும் ஆஜீத்தை அடுத்த வாரம் கேப்டனாக ஆக்கி விட்டனர். யார் யாருக்கு எந்த டீம் என்றும் ஆஜீத் பிரித்தது போன்று காட்டவில்லை. அடுத்த வாரம் தலைவராக ஆஜீத் ஆகி விட்ட நிலையில், பாலாவுக்கு யார் பணிவிடைகளை செய்வார்கள் என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











