ஷாப்பிங் போன இடத்தில் சர்ப்ரைஸ்.. ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் தாமரை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை இன்று தனது பிறந்தாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு ஜவுளிக்கடைக்கு தனது கணவருடன் சென்ற தாமரைக்கு அங்கே ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் மறக்க முடியாத அனுபவமாக மாறி உள்ளது.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தாமரை மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஐக்கி பெர்ரியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

தாமரை பிறந்தநாள்
சாதாரண நாடகக் கலைஞராக இருந்த தாமரையை பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய நட்சத்திரமாகவே மாற்றி விட்டது. பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என விஜய் டிவியிலேயே செட்டில் ஆன தாமரை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்தி வரும் நிலையில், சில ரசிகர்கள் நேரடியாக தாமரைக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

ஜவுளிக்கடைக்கு கணவரோடு
பிறந்தநாளை முன்னிட்டு ஆரஞ்சு நிற பட்டுப்புடவையில் செம அழகாக கணவருடன் ஜவுளிக்கடைக்கு ஷாப்பிங் சென்றுள்ளார் தாமரைச் செல்வி. ஆனால், தனது பிறந்தநாளை அங்கேயே கொண்டாடப்போகிறோம் என கொஞ்சம் கூடாத அவர் நினைக்காத நிலையில், அந்த தரமான சம்பவம் நடந்துள்ளது.

சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்
தாமரையின் தீவிர ரசிகர்கள் சிலர் அந்த ஜவுளிக்கடைக்கே கேக் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து அவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள தாமரை, ஷாப்பிங் போன இடத்தில் சர்ப்ரைஸ் என பதிவிட்டு உள்ளார்.

ஐக்கி பெர்ரியுடன் கேக் கட்டிங்
ரசிகர்களுடன் ஜவுளிக்கடையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தாமரைச் செல்வி அடுத்து தனது சக போட்டியாளரான ஐக்கி பெர்ரியுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஹேப்பி பர்த்டே அக்கா என அவர் அன்போடு குறிப்பிடப்பட்டிருப்பதும் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் மூலம் தெளிவாகி உள்ளன.

வாழ்த்திய பாலா
பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலா மற்றும் தாமரை இடையே அக்கா தம்பி உறவு அற்புதமாக வளர்ந்தது. இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்து முதல் ஆளாக பாலாஜி முருகதாஸ் லைக் போட்டு வாழ்த்தியுள்ளார். ஷிவானி பார்ட்டி வைத்ததை போல தாமரையும் பர்த்டே பார்ட்டி வைத்து பிக் பாஸ் பிரபலங்களை அழைப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











