twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம் பிக் பாஸ் எடிட்டர்.. 3வது புரமோ போட கன்டென்ட்டே இல்லாம தவிக்கிறாரு.. இப்படி போனா எப்படி?

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன பிரச்சனை நடக்கிறது என்றே தெரியவில்லை.

    வழக்கமாக 3 மணிக்கு வரும் 3வது புரமோவை இன்று காணவில்லை.

    தலைவர் டாஸ்க்கை தவிர வேறு ஏதும் இல்லாததால், இரண்டு புரமோவிலும் அதையே வைத்து ஓட்டிட்டார் போல என்று கலாய்த்து வருகின்றனர்.

    என்ன சோன முத்தா போச்சா.. பாலாவை நல்லா வெளுத்து வாங்கும் பிக் பாஸ் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?என்ன சோன முத்தா போச்சா.. பாலாவை நல்லா வெளுத்து வாங்கும் பிக் பாஸ் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

    கடுப்ப கிளப்பாதீங்க

    கடுப்ப கிளப்பாதீங்க

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்த ரசிகர்கள், கடுப்பை கிளப்பாதீங்க, அந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியல, இந்த வாரம் சுசித்ரா வந்த உடனே சூடு பிடிக்கும் என்று பார்த்தால், ரொம்பவே மோசமாகிட்டு போகுது என ரசிகர்கள் திட்டத் தொடங்கி விட்டனர்.

    மூன்றாவது புரமோவுக்கு என்ன ஆச்சு?

    மூன்றாவது புரமோவுக்கு என்ன ஆச்சு?

    வழக்கமாக மாலை 3 மணிக்கு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ இன்னும் வரலையே என விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்திலேயே தேவுடு காத்த பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம், கடையை சாத்திட்டு கிளம்ப ஆரம்பித்து விட்டனர். என்ன தான் ஆச்சு? இந்த சீசன் பிக் பாஸுக்கு என்றும் புலம்பி வருகின்றனர்.

    அந்த பிரச்சனை

    அந்த பிரச்சனை

    பாலாஜி முருகதாஸ் பிரச்சனை தான் இப்போ விஜய் டிவிக்கு மிகப்பெரிய தலைவலியாக விடிந்து விட்டது என்றும், அதில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்றே தெரியாமல், நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குழம்பி வருவதால், தான் இத்தனை குழப்பங்களும் புரமோ போடுவதில் தாமதமும் என சில நெட்டிசன்கள் தங்களின் புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

    கன்டென்ட் பஞ்சம்

    கன்டென்ட் பஞ்சம்

    மற்றும் சில ரசிகர்கள் நேற்றைய எபிசோடே ரொம்ப போரிங்கா போனதாகவும், இன்றைய நிகழ்ச்சிக்கு தலைவர் டாஸ்க்கை தவிர வேறு கன்டென்ட் இல்லாததால் தான் இப்படி மூன்றாவது புரமோவை போடவில்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    இத்தனை பேர் இருந்தும்

    இத்தனை பேர் இருந்தும்

    விஜய் டிவி புராடக்ட்களை கொண்டு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றும், தொடர்ந்து 16 போட்டியாளர்களை கொண்டு வீடு நிரம்பி வழிவதாகவும் பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், இத்தனை பேர் இருந்தும் ஒரு மூன்று புரமோவுக்கு கூடவா கன்டென்ட் கிடைக்கல என்றும் கேள்விகள் பறக்கின்றன. 3வது புரமோ வருமா? வராதா?

    வனிதாவும் மீராவும்

    வனிதாவும் மீராவும்

    ஆனால், கடந்த சீசனில் இது போன்ற பிரச்சனையே இல்லை என்றும், வனிதா விஜயகுமார், மீரா மிதுன், சாண்டி மாஸ்டர், கவின், லாஸ்லியா, தர்ஷன், முகேன் ராவ், மதுமிதா என ஏகப்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போரடிக்காத கன்டென்ட்களை கொடுத்தனர் என்றும் கம்பேர் பண்ணி வருகின்றனர். வனிதா அக்காவை ஒரு வாரத்திற்கு உள்ளே விடுங்க, அப்புறம் பிக் பாஸ் நிகழ்ச்சி மறுபடியும் சூடு பிடிக்கும் பாருங்க என்றும் கூறி வருகின்றனர்.

    English summary
    Bigg Boss fans got upset over today’s third promo never come. They troll the show and week contestants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X