கவின் லாஸ்லியா தான் ஞாபகத்துக்கு வராங்க.. ஷிவானி – பாலா ஜோடியை கண்டுக்காத ரசிகர்கள்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், போன சீசனில் பார்த்த கவின் - லாஸ்லியா ஜோடி தான் ஞாபகத்துக்கு வராங்கன்னு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிரிஸ்மா சிறந்த ஜோடிகள் டாஸ்க் இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஷிவானி நாராயணன் - பாலாஜி முருகதாஸ் பண்ணும் லூட்டிகளை 4வது புரமோவாக வெளியிட்டுள்ளனர்.

புது ஜோடி

புது ஜோடி

இந்த சீசனில் யாரையும் ஜோடியாக்க முடியல என தவித்து வந்த பிக் பாசுக்கு கடைசியா ஷிவானி ஓகே சொல்ல, பாலாஜியுடன் ஆரம்பமாகி விட்டது ரொமான்ஸ். கடந்த சில நாட்களாகவே இருவரது ரவுசும் தாங்காத நிலையில், இன்னைக்கும் கொஞ்சம் ஹெவி டோசாகவே போகிறது.

செல்லம்மா பாட்டுக்கு

செல்லம்மா பாட்டுக்கு

ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாஸும் இணைந்து டாக்டர் படத்தின் செல்லம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனாங்க, அப்போ இருந்தே இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி வருகிறது. அரச குடும்பம் டாஸ்க்கில், ஷிவானியை பணிப்பெண்ணாக வைப்பது போல அவருடன் தனியா லவ் டிராக்கே போயிட்டு இருக்கு.

கனெக்‌ஷன் கொடுத்தாச்சா

இந்நிலையில் 4வது புரமோவை பார்த்த ரசிகர்கள், ஷிவானி - பாலா ஜோடியை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஏகப்பட்ட காமெடி கமெண்ட்டுகள் களை கட்டுகின்றன. ஹலோ பிக் பாஸா? பயில்வானுக்கு கனெக்‌ஷன் கொடுத்தாச்சா? என்றும் மாமா வேலை பார்க்கிறதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

என்னடா நடக்குது இங்க

ஷிவானியும் பாலாஜியும் ஜோடி சேர்ந்து ஆடுவதை பார்த்து காண்டான ரசிகர்கள், வழக்கம் போல, வில்லு படத்தின் "என்னடா நடக்குது இங்க" காமெடி போட்டோவை போட்டு கலாய்த்து வருகின்றனர். ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும், சரியில்லை என்றும் ஏகப்பட்ட விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

தனியாத்தான் பார்க்கணும் போலயே

ஷிவானியை இடுப்பில் பிடித்து தூக்குவதும், கட்டிப் பிடித்துப் புரட்டுவதுமாக இந்த பாலா செய்யுற சேட்டையெல்லாம் பார்த்த இந்த நெட்டிசன் டெம்ப்ட் ஆகி, இன்னைக்கு எபிசோடை தனியாத்தான் பார்க்கணும் போலயே என கமெண்ட் போட்டு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகிறார்.

4வது புரமோ வேறயா

அனிதா சம்பத் அவங்க புருஷனை பத்தி ஓவரா உருகி அழுது, ஒரு கதைக்கு பத்து கதை சொல்ல ஆரம்பிச்சதும், சிரிச்சி கெடுத்த ஆஜீத், ரம்யா போட்டோவை போட்டு, இன்னைக்கு 4வது புரமோ வேறயா? அவங்க ரெண்டு பேரும் டான்ஸ் பிராக்டிஸ் பண்றதையெல்லாம் போட்டு, நல்லாவே கோர்த்து விடுங்க எடிட்டர் என பிக் பாஸ் எடிட்டரையும் கண்டபடி திட்டி வருகின்றனர்.

கவின் – லாஸ்லியா தான்

பிரிஸ்மா சிறந்த ஜோடி டாஸ்க்கை பார்த்ததும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு போன சீசனில் லாஸ்லியா - கவின் வந்து மேடையை அலங்கரித்த காட்சிகள் தான் ஞாபகத்துக்கு வருவதாகவும், அவங்கள போல பெஸ்ட் பிக் பாஸ் ஜோடி எப்பவுமே வரமாட்டாங்க என்றும் கவிலியா ரசிகர்கள் பழைய நினைவுகளுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

மற்ற ஜோடிகள்

ஷிவானி பாலாஜியை கண்டுகாத பிக் பாஸ் ரசிகர்கள், மற்ற ஜோடிகளின் மேலும், தங்களின் பார்வைகளை செலுத்தி புரமோவில் ஒரு நொடி கூட காட்டாத அவர்களையும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டுருக்காங்க, பாவம் ரம்யா பாண்டியன், கேபிக்கெல்லாம் இந்த சீசனில் லவ் எபிசோடே கிடையாது போல!

இருந்த ஒண்ணும் போச்சோ

தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற மாச்சோ பாடலுக்கு பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன் ஆடுவதை பார்த்த ரசிகர்கள், மாச்சோ.. என்னாச்சோ.. இருந்த ஒண்ணும் போச்சோ என புலம்ப ஆரம்பித்து விட்டனர். இப்படியே போனா ஷிவானியோட 2 மில்லியன்ல ஒரு மில்லியன் காணாம போயிடும் என்றும் இளைஞர்கள் சாபம் விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X