அய்யோ பாவனி இவனை சேவ் பண்ணிடாத.. பிக் பாஸ் பிளானை புரிந்து கொண்டு எச்சரிக்கும் ரசிகர்கள்!

சென்னை: நீருப் தன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றி விடுவான் என புரிந்து கொண்ட அபிஷேக் பாவனியிடம் தனியாக காப்பாற்ற சொல்லி கெஞ்சும் புரமோவை பார்த்த ரசிகர்கள் பாவனி இவனை சேவ் பண்ணிடாத என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நிச்சயமாக இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று அபிஷேக் ராஜா தான் வெளியேறும் இடத்தில் இருப்பார் என்றும் ஆனால், அவரை சேவ் பண்ண விஜய் டிவி போட்ட திட்டம் தான் இந்த டாஸ்க் என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

கடந்த சீசனில் ஆஜித்தை காப்பாற்றியது கூட பரவாயில்லை. ஆனால், இந்த சீசனில் அபிஷேக்கை மட்டும் சேவ் பண்ணிடாதீங்க என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

நவகிரகம்

நவகிரகம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 என்பதற்கு பதிலாக 9ல் இப்படி பட்ட போட்டியாளர்களை விஜய் டிவி அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக நவகிரகம் போல காட்சியளிக்கிறது என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த் கலவை

ஒட்டுமொத்த் கலவை

ஆளவந்தான் படத்தில் கமல் சார் கடவுள் பாதி மிருகம் பாதி என பாடியிருப்பார். ஆனால், இந்த அபிஷேக்கை என்ன ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை கடுப்பேற்றிய ஜூலி, மீரா மிதுன், வனிதா விஜயகுமார், காயத்ரி மற்றும் அர்ச்சனாவின் ஒட்டுமொத்த கலவை இவர் என்றும் அவ்வளவு எல்லாம் வொர்த் இல்லை பாஸ் இவர் வெறும் டம்மி பீஸ் என்றும் பங்கம் செய்து வருகின்றனர்.

அபூர்வ மனிதன்

அபூர்வ மனிதன்

யூடியூபில் ஓப்பன் பண்ணா என புதிய படங்களை விமர்சனம் நடத்தி கெத்தாக இருந்த அபிஷேக் ராஜாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து இப்படி சிங்கத்தை செல்லில் வைத்து சிதைத்து விட்டீர்களே என்றும் இந்த அபூர்வ மனிதன் அபிஷேக்க எங்க கண்டு பிடித்தார்களோ என்றும் நெட்டிசன்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

கடைசி வரைக்கும் வந்துருவான்

கடைசி வரைக்கும் வந்துருவான்

"#AbishekRaaja எதாவது பேசி பேசி, யார் கூடையாவது வேணும்னு வம்பு இழுத்து, எதாவது கன்டென்ட் குடுத்து எப்படியோ கடைசி வரையும் வந்துருவானு தோணுது, அதே சமயம் அவன் கூட இருந்தே இந்த #Priyanka & #Pavni எல்லாம் என்ன ஆக போறாங்களோ தெரியல.. அவன் கூட இருந்து இவங்க டேமேஜ் ஆகாம இருந்தா சரி!" என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

மூடிட்டு படுறா

மூடிட்டு படுறா

"மென்டல் அபிஷேக் சுருதியை கன்ஃப்யூஸ் பண்ண நினைக்க.. மூடிட்டு உங்க வேலையை பாருங்க என சுருதி சொன்னதை ஏகப்பட்ட ரசிகர்கள் பல வித மீம்களாக போட்டு கொண்டாடி வருகின்றனர். மூடிட்டு படுறா வெண்ணெய்" என திட்டும் இந்த மீம் வைரலாகி வருகிறது.

தெரிஞ்சு போச்சு உங்க ஊழல்

தெரிஞ்சு போச்சு உங்க ஊழல்

அப்போ இந்த வாரம் எலிமினேட் ஆகப் போற அபிஷேக் ராஜா சக போட்டியாளரான பாவனி அல்லது நிரூப் மூலம் சேவ் ஆகப் போறான்.. தெரிஞ்சு போச்சு உங்க ஊழல் என விஜய் டிவியையும் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இவன சேவ் பண்ணிடாத

இவன சேவ் பண்ணிடாத

அய்யோ பாவனி.. இவனை சேவ் பண்ணிடாத என அபிஷேக் ராஜா தனியாக பாவனியை அழைத்து கெஞ்சும் புரமோ காட்சியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் கெஞ்சாத குறையாக கமெண்ட் செய்து வருகின்றனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொன்ன நிலையில், அபிஷேக் ராஜா சேவ் ஆகிடுவான் என நினைக்கும் நேரத்தில் பாவனி அபியை சேவ் பண்ணாமல் ஆப்பு வைத்து அபியை இந்த வாரம் எலிமினேட் செய்யும் காட்சிக்கும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X