நீ நாடகத்துல நடிக்கலாம்டா.. அநியாயதுக்கு கண்ணுல தண்ணி வருது.. அபிஷேக்கை வச்சு செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஜூலியாகவே அபிஷேக் மாறி விட்டார் என்று தான் ஏகப்பட்ட ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சர்வைவர் தமிழில் எப்படி விஜே பார்வதி பார்வையர்களை இரிடேட் செய்து வருகிறாரோ அதை விட அதிகளவு ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறார் அபிஷேக் ராஜா என்கிற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.
சோக கதையை சொல்லவே ஒரு டாஸ்க் கொடுத்திருக்கும் போது அதற்கு முன்பே தனியாக ஒரு டிராக் ஏன் பா அபிஷேக் ஓட்டுற என அபிஷேக் அம்மா பற்றி பேசி அழுததை கலாய்த்து வருகின்றனர்.

போட்டியாளர்கள் பற்றி விமர்சனம்
ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலில் வேற லெவல் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து ஹைடெக்காக விமர்சனம் பண்ணுவது போல அபிஷேக் பேசும் போதே பலருக்கும் அவர் பேச்சின் மீது ஈடுபாடு இல்லை என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ள போட்டியாளர்கள் குறித்து அபிஷேக் செய்த விமர்சனம் ரசிகர்களை சோதிக்காதீங்கடா என்னைய்யா என சொல்ல தூண்டியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் நண்பர்
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்த நடிகர் சிபி இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் நண்பர் என்பதற்காக உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என அபிஷேக் ராஜா விமர்சித்தார். ஆனால், அதையும் தாண்டி உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பல உள்ளன என்றும் கூறினார்.

ஜெமினி சாவித்ரி பேரன்
அடுத்ததாக அரச குடும்பத்தில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என ஒரு இளவரசன் இருப்பான்ல அவரை போல தான் நீங்க என நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் குறித்தும் விமர்சித்தார். ஜெமினி பேரன்னாலே வேற லெவல், இதுல ஜெமினி, சாவித்ரி பேரன் நீங்க என ஓவராக புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அழுத அபிஷேக்
செம ஜாலியாக மற்றவர்களை கலாய்த்து பேசி வந்த அபிஷேக் ராஜா, திடீரென அனைவரும் குழுவாக அமர்ந்திருக்கும் நேரம் பார்த்து திடீரென அம்மாவை பற்றி பேசி அழ ஆரம்பித்து விட்டார். அப்பாவை இழந்த தன்னை அம்மா தான் வளர்த்து ஆளாக்கினார் என்று அம்மாவை பற்றி பேசி கண்ணீர் சிந்தி அழ தொடங்க சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

நெட்டிசன்கள் சும்மா இல்லையே
என்னதான் அழுது சிம்பதி கிரியேட் செய்ய அபிஷேக் ராஜா நினைத்தாலும், நாங்க சும்மா விடுவோமா என அவரை மொத்தமாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம்களை போட்டு வருகின்றனர். அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், பல பிக் பாஸ் ரசிகர்களுக்கும் அவர் மீது பாவமே ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடகத்துல நடிக்கலாம்
"இதுவரைக்கும் பாத்த Bigbossல இரண்டாவது நாளே ஒருத்தன வெறுத்ததுனா அது abishek தான். என்னமா பர்பார்மன்ஸ் பண்ணுறான். அடேய் நீ நாடக்கத்துல நடிக்கலாம்டா அநியாயதுக்கு கண்ணுல தண்ணி வருது" என பிக் பாஸ் ரசிகர்கள் அபிஷேக்கை வைத்து அதகளம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மொக்கை போடுவான்னு
கடந்து வந்த பாதையை சொல்லி சோக கீதம் பாட பிக் பாஸே இந்த சீசனிலும் தனியா ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்கும் போது, நீ ஏன் பா அபிஷேக் தனியா ஒரு டிராக் ஓட்ற என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், இவன் இப்படி மொக்கை போடுவான்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு எபிசோடையே பார்த்திருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டம் எனவும் மீம்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











