பொம்பள குரலில் பேசு.. அழகுன்றது குரலில் அல்ல குணத்தில் தான் இருக்கு.. தர்ஷிகாவை தாளித்த ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள செளந்தர்யாவின் குரல் சற்று மாறுபட்டுள்ள நிலையில், அவரிடம் பொம்பள குரலில் பேசு என தர்ஷிகா எடுத்த எடுப்பிலேயே அசிங்கப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள் அவரை தாளித்துக் கொட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த செளந்தர்யாவின் குரல் பிரச்சனையை கிண்டல் செய்து தர்ஷிகா பேசியது ரசிகர்களை ஆரம்பத்திலேயே அவருக்கு எதிராக திருப்பியிருக்கிறது.

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்டாமரிங் பிரச்சனையுடன் சோம்சேகர் வந்த போது கூட அவருக்கு எதிரான ட்ரோல்கள் வந்தன. ஆனால், அதையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் கிராண்ட் ஃபினாலே டிக்கெட்டை வென்று முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினேலேவுக்குள் நுழைந்து மாஸ் காட்டினார் என்பதை யாராலும் மறக்க முடியாது.
குரலை விட குணம் முக்கியம்: செளந்தர்யா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த உடனே விஜய் சேதுபதி அவரிடம் பேசும் போது அவருடைய குரலை தாண்டிய குணத்தை பாராட்டி பேசியிருந்தார். அதையே ஹைலைட் செய்து பிக் பாஸ் ரசிகர்கள் தர்ஷிகா தலையில் குட்டு வைத்து வருகின்றனர்.
பொம்பள குரலில் பேசு: செளந்தர்யாவின் குரலுக்கு என்ன ஆச்சு என அக்கறையுடன் கேட்காமல் பொம்பள குரலில் பேசு என தர்ஷிகா அவரை பார்த்து கிண்டல் செய்தது ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் ஆளாக தர்ஷிகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க பிக் பாஸ் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆரம்பமே சண்டை: பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போட்டு ஆரம்பமே ஒரு சண்டையை உருவாக்கிய நிலையில், ஒவ்வொரு பிரச்சனையாக கிளப்பி விட்டு இந்த சீசனை முதலில் இருந்தே சுவாரஸ்யமாக கொடுத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீம் முடிவு செய்திருப்பது தெளிவாகவே தெரிகிறது என்கின்றனர். செளந்தர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் நாளை அப்படியே அவருக்கு எதிராகவும் மாற நிறையவே வாய்ப்புகள் இருக்கு அதையும் வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











