பெயரை கெடுத்துக் கொண்ட பிரியங்கா.. அக்ஷரா மீது என்ன காண்டுன்னு தெரியலயே என விளாசும் ரசிகர்கள்!
சென்னை: ஆரம்பத்திலேயே விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவை அர்ச்சனாவுடன் கம்பேர் பண்ணிய ரசிகர்கள் எல்லாம் பிரியங்காவின் நல்ல மனதை பார்த்து அவரை பாராட்டினர்.
ஆனால், அக்ஷரா விஷயத்தில் மட்டும் பிரியங்கா முரணாக நடந்து கொள்வதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிரியங்கா மீது ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு குறையத் தொடங்கி உள்ளது.
பிரியங்காவை ரொம்பவே பிடிக்கும் என்றாலும் அக்ஷரா விஷயத்தில் அவர் செய்வது நியாயம் இல்லை என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றைய 2வது புரமோவை பார்த்து கடுப்பாகி அடித்துள்ள கமெண்ட்டுகளை இங்கே காண்போம்

பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை
அக்ஷரா ரெட்டியை ஆரம்பத்தில் இருந்தே பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை என்பது அவர் அக்ஷராவை நாமினேட் செய்தது, அக்ஷராவுக்கு லைக் கொடுத்த ராஜு ஜெயமோகனுடன் வாக்குவாதம் செய்தது மற்றும் கூட்டத்தில் காணாமல் போனவர் என அக்ஷராவை நாமினேட் செய்வது என ஒவ்வொரு நாளாக தனது சுயரூபத்தை காட்டி வருகிறார் பிரியங்கா.

இந்த மூன்று பேர் தான்
"கான்பார்ம் ஆகுது #Priyankaக்கு #AksharaReddyய புடிக்கல டைம் கிடைக்கும் போது அக்ஷரவா டார்கெட் பண்ணுறானு நினைக்குறேன்.. பிரியங்கா என்னமா இப்படி பண்ணுற? கூட்டத்துல காணாம போனவங்க அப்படி பார்த்தா #Nadiachang, #Isaivani, #Varun இவங்க மூணு பேரும் தான் டாப் லிஸ்ட்.." என இந்த பிக் பாஸ் ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

ஃபுல் டைம் டார்கெட்
பிரியங்காவோட ஃபுல் டைம் டார்கெட்/மிஷன் எல்லாமே அக்ஷராவை டார்கெட் பண்றது தான்.. இதுல பக்க வாத்தியம் அபிஷேக் மற்றும் ரவா டப்பா என பிரியங்கா கேங்கை நெட்டிசன்கள் வேற லெவலில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Recommended Video

என்ன காண்டு
நாடியாவின் நேர்மை பிடித்து இருப்பதாகவும், பிரியங்காவுக்கு அக்ஷரா ரெட்டி மேல என்ன தான் காண்டுன்னும் பிக் பாஸ் ரசிகர்கள் பல பேர் பிரியங்காவுக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு அவரை திட்ட ஆரம்பித்துள்ளனர்.

பிரியங்காவுக்கு பொறாமை
விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால் இந்த பிக் பாஸ் வீட்டையே தான் தான் ஆள வேண்டும் என பிரியங்கா நினைப்பதால் தான் அவருக்கு எதிரான ஆட்களை காலி செய்யும் நோக்கில் இப்படி அக்ஷராவுக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார் பிரியங்கா என்றும் பிரியங்காவுக்கு அக்ஷராவை பார்த்து பொறாமை என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











