அடேங்கப்பா.. என்னவொரு ரெட் கார்டு டிராமா.. ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கணும்.. பூசாத மாதிரியும்!

சென்னை: சனிக்கிழமை கமல்ஹாசன் வருவார்.. அசீமை கண்டித்து ரெட் கார்டு தருவார்.. என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பிம்பிலிக்கி பிலாப்பி என கொடுத்த அல்வா இருக்கே ரொம்ப சூப்பர் என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

வந்ததும் வராததுமாக முதல் பஞ்சாயத்தாக அசீம் பஞ்சாயத்தையே கையிலெடுத்த கமல், முதலிலேயே இந்த ரெட் கார்டு என்னிடமோ, பிக் பாஸ் இடமோ இருந்து வந்தால் நீங்க உள்ளே இருக்க முடியாது என சொல்லி அசீமை ரிலாக்ஸ் செய்து விட்டார்.

அதன் பின்னர் கடந்த வாரம் கொடுத்த க்ரீன் கொடிக்கும் இந்த வாரம் கொடுக்கும் ரெட் கார்டுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் ஜாலியாக வாங்கி வைத்துக் கொண்டார் அசீம்.

ரெட் கார்டு விளையாட்டு

ரெட் கார்டு விளையாட்டு

அப்படி தான் டி பேசுவேன் என பெண் போட்டியாளரிடம் எகிறி வந்த அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியே அனுப்புவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கமல் சனிக்கிழமை எபிசோடில் வந்து கடந்த வாரம் பச்சைக் கொடி, சிகப்பு கொடி விளையாட்டை விளையாடியது போலவே இந்த வாரம் ரெட் கார்டு விளையாட்டை அசீம் - ஆயிஷா பிரச்சனையை வைத்து விளையாடிவிட்டார்.

அசல் கோலார் தனலட்சுமியை தவிர்த்து

அசல் கோலார் தனலட்சுமியை தவிர்த்து

அசீம் செய்தது தப்பு தான் என சக ஹவுஸ்மேட்களே ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய கடுங்காவல் தண்டனையை அசீமுக்கு கமல் கொடுத்த நிலையில், அசல் கோலார் மற்றும் தனலட்சுமியை தவிர்த்து மற்ற அத்தனை போட்டியாளர்களும் அசீம் உள்பட அனைவரும் அசீமுக்கே ரெட் கார்டு கொடுத்தனர். அசல் கோலார் - தனலட்சுமிக்கும், தனலட்சுமி - அசல் கோலாருக்கும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை காரணமாக மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டனர்.

திருக்குறள் எல்லாம் சொல்லி

திருக்குறள் எல்லாம் சொல்லி

தனக்குத் தானே ரெட் கார்டை கொடுத்து விட்டு இதற்கு மேல் தான் கோபமே பட மாட்டேன் என்பது போல "தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே.. நாவினாற் சுட்ட வடு" என்கிற திருக்குறளை எல்லாம் சொல்லி பேசி கமலுக்கே வேலை கொடுக்காமல் ரொம்பவே நல்லவராக மாறி சேஃப் ஆகி விட்டார்.

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் என்பது போல அசீம் பண்ண தவறுக்காக அவரே மன்னிப்பு கேட்டு தனக்குத் தானே ரெட் கார்டு கொடுத்துக் கொண்டதால் கமல்ஹாசனும் அசீமை மன்னித்து விட்டார். இந்த ரெட் கார்டு டிராமாவை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

வஞ்சம் இருக்கும்

வஞ்சம் இருக்கும்

அசீம் கேமராவை பார்த்து தனது அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாலும், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் தனக்கு எதிராக ரெட் கார்டு கொடுத்துள்ளது அவருக்குள் மேலும், கோபத்தையே அடுத்த வாரத்தில் ஏற்படும் என்பது கன்ஃபார்ம். அசீமை உள்ளே வைத்து இன்னமும் சண்டை மூட்டிவிட்டு டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க பிக் பாஸ் டீம் பலே திட்டம் போட்டுள்ளது என்றும் கமெண்ட்டுக்ள் குவிகின்றன.

விக்ரமனுக்கு புகழாரம்

விக்ரமனுக்கு புகழாரம்

அசீமை கண்டிக்காதது கூட பரவாயில்லை. விக்ரமன் அரசியல்வாதி என்பதால், அவருக்கு கமல் தொடர்ந்து புகழாரம் பாடுவதை எல்லாம் ரசிகர்கள் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆயிஷா செருப்பை காட்டியது தவறு என்று கண்டிக்காமல் தட்டிக் கொடுத்ததற்காக கமலை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X