யார் மேல தப்பு? வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா? வெளுத்து விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரமோவை பார்த்த ரசிகர்கள் என்னடா எல்லை மீறி போறீங்க என அதிர்ந்து போயுள்ளனர்.

சனம் ஷெட்டி, ஏய்.. வெளிய வாடா என வரம்பு மீறி பேசியது குற்றம் என்று சிலரும், சனம் மேல தப்பு இல்லை, சுரேஷ் சக்கரவர்த்தி பண்ணது கொஞ்சம் கூட சரியில்லை என்று சிலரும் யார் மேல தப்பு என விவாதித்து வருகின்றனர்.

வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் சக்கரவர்த்தி செய்றது எல்லாம் நியாயமா என Suresh ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பர்சனலா தாக்குறது

பர்சனலா தாக்குறது

நேற்றைய எபிசோடில் அரக்கனாக வேஷம் போட்டு கேம் விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி, எல்லை மீறி பர்சனல் அட்டாக் அதிகமாக பண்ண ஆரம்பித்தார். அதிலும், சனம் ஷெட்டி மற்றும் ரியோ ராஜ் குறித்து அவர் பேசியது, முற்றிலும் முறையான ஒன்று கிடையாது என அப்பவே ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டத் தொடங்கினர்.

எல்லை மீறிய புரமோ

எல்லை மீறிய புரமோ

இந்நிலையில், இன்றைய 2வது புரமோ பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வயதான சுரேஷ் சக்கரவர்த்தியை சனம் ஷெட்டி, வாடா போடா என பேசுவதை கேட்டு, ஏன் மா உனக்கு அறிவு இல்லையாம்மா என்று பலரும் சனம் ஷெட்டியை திட்டத் தொடங்கினர். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்தது தான் தப்பு என இன்னும் பல பிக் பாஸ் ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.

மொட்டைய அடிச்சு துரத்துங்க

மொட்டைய அடிச்சு துரத்துங்க

பெரும்பாலும் பெண் ரசிகைகள், சனம் ஷெட்டி செய்தது தவறு என்றும், சுரேஷ் சக்கரவர்த்தி ஒழுங்காவே கேம் விளையாடவில்லை. வஞ்சம் வைத்தே ஹவுஸ்மேட்களை பழி வாங்குகிறார் என்கின்றனர். "மொட்டைய அடிச்சு துரத்துங்க.. கொலையே பண்ணிடுவான் போல.. கேபரில்லாவுக்கு மட்டும் கூஜா தூக்குறான்" என ரொம்பவே கொதித்துப் போயுள்ளனர்.

நியாயமான கோபம் தான்

நியாயமான கோபம் தான்

"Finally சனம் Burst Out. ..இது அவளோட நியாயமான கோவம் தான் மொட்ட அவள ரொம்ப சீண்டுறான்.. இது அவனுக்கு நல்லது இல்ல" என ஏகப்பட்ட சனம் ஷெட்டி ரசிகர்கள் மற்றும் பெண்கள் சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் என்னலாம் நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X