எவன்டா அந்த ஒரு ரெட் பஸர அடிச்சது.. ஷிவின் பேசுறதை கூட கேட்க முடியாதா? விக்ரமனை திட்டும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வருஷா வருஷம் செட் டிசைன் மாறுமே தவிர இந்த கதை சொல்லும் டாஸ்க் மாறவே மாறாது என ரசிகர்கள் ஒரு பக்கம் கிண்டல் செய்தாலும், போட்டியாளர்களை பற்றி அறிந்து கொள்ள ஒரே வழி நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என்பது போல இருப்பதால் இந்த சீசனிலும் பிக் பாஸ் டீம் அதை 2வது வாரத்தில் வைத்துள்ளது.
கொஞ்சம் இல்லை இந்த முறை நிறையவே சுவாரஸ்யத்தையும் சண்டையையும் கூட்ட பஸரையும் கூடவே வைத்துள்ளனர்.
யார் என்ன கதை சொன்னாலும், முதல் ஆளாக எழுந்து வந்து விக்ரமனும், தனலட்சுமியும் அடித்து வரும் நிலையில், ஷிவினுக்கு கூட ஒரு ரெட் பஸர் அடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர்.

ஸ்டே ஸ்ட்ராங்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களின் எமோஷன்களுடன் விளையாடினாலும், திருநங்கை போட்டியாளரின் எமோஷனுடன் விளையாடக் கூடாது என்பதை ரசிகர்களை போலவே பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் புரிந்து வைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஷிவினின் கண்ணீர் கதையை கேட்ட ரசிகர்கள் ஸ்டே ஸ்ட்ராங் ஷிவின் என கமெண்ட் போட்டு ஆதரவு அளித்து வருகின்றனர்.

நமீதா நிலைமை வரக்கூடாது
போன முறை பிக் பாஸ் வீட்டிற்கு முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வாக்கவுட் செய்து விட்டார். அவர் எப்படி போனார் என்றே இன்னமும் உண்மை தெரியவில்லை. இந்த ஷிவின் ஆவது கடைசி வரை நிலைத்து விளையாட வேண்டும் என மற்றொரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

எவன்டா அது
ஷிவினை பேச விடாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாருமே தடுக்கவில்லை என்று பார்த்தால், ஒரே ஒரு ரெட் பஸர் அடித்திருப்பதை புரமோவில் நோட் பண்ண ரசிகர்கள் எவன்டா அது ஷிவினுக்கு ரெட் பஸர் அடிச்சது, உங்களையெல்லாம் பார்த்தா அசிங்கமா கேட்கணும்னு தோணுது என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

விக்ரமனா இருக்கும்
புரமோவில் யார் என்றே காட்டாத நிலையிலும், நம்ம முந்திரிக்கொட்டை விக்ரமனாத்தான் இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். விக்ரமனா? அல்லது தனலட்சுமியா தெரியவில்லையே என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

டைட்டில் வின் பண்ணனும்
உங்களை போல உள்ளவர்களுக்கு நல்ல வேலை, படிப்பு கிடைக்க நீங்க பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணனும் என்றும் ஷிவினுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். ஷிவினுக்குத் தான் என்னுடைய ஓட்டுக்கள் என்றும் ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











