நீ தடவுறத தவிர வேற என்ன பண்ண.. அசல் கோலாரை பங்கமாக கலாய்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை: ஒரு வழியாக அந்த தடவல் பார்ட்டி அசல் கோலார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என ரசிகர்கள் 3வது புரமோவை பார்த்தே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
ஏற்கனவே அசல் கோலார் தான் இந்த வாரம் வெளியேறுகிறார் என்கிற தகவல் கசிந்த நிலையில், நான் எதுக்கு இங்கே இருக்கேன்னு எனக்கே தெரியல என கமலிடம் அசல் பேசிய வசனம் ரசிகர்களை ரொம்பவே எரிச்சலடைய வைத்துள்ளது.
பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன பண்ணுனேனு வேற கேக்குறீயா என ட்ரோல் செய்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நிவா அழுவதை காண
அசல் கண்டிப்பா என் கூட பிக் பாஸ் வீட்டுல இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும் சார் என கமலிடம் பேசும் நிவாஷினி, இந்த வாரம் அசல் கோலார் எவிக்டட் என்று தெரிந்ததும் அவரை எப்படி கட்டிப் பிடித்து கதறி அழுது வழியனுப்ப போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மைனா ரியாக்ஷன்
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. அசல் கோலார் விளையாடிய காதல் விளையாட்டுக்கு கடைசி வரை உள்ளே இருப்பார் என்று தானே எதிர்பார்த்தோம். இப்படி 3வது வாரமே அதிரடியாக வெளியேறுகிறாரே என வாயில் கை வைத்து பார்க்கும் ஸ்டில்லையும் புரமோவில் இருந்து எடுத்துப் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆண்டவர் டு அசல்
ஆண்டவர் டு அசல் என கமெண்ட் போட்டு துப்பாக்கி படத்தில் வில்லனை விஜய் போட்டுத் தள்ளும் காட்சியை ரசிகர்கள் ஷேர் செய்து அசல் கோலார் எவிக்ஷனை கொண்டாடி வருகின்றனர்.

ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடாத
"டேய் அசல் நீ என்னடா பண்ணல... எவ்ளோ பெரிய கான்பிடென்ட் உனக்கு... இந்நேரம் தெரிஞ்சிருக்கும் உள்ள நீ ஆடின ஆட்டம் வெளிய எப்படி Portray
ஆகிருக்குன்னு. அதிர்ச்சியில ஹாஸ்பிட்டல் ல அட்மிட் ஆகிடாத.. இனியாவது எங்க எப்படி நடந்துக்கனும்னு கத்துகிட்டா நல்லது...." என இந்த நெட்டிசன் வன்மையாகவே கண்டித்துள்ளார்.

தடவுனது தவிர
நீ தடவுனது தவிர வேற என்னடா பண்ண.. நிவாம்மா நீ எப்படி அசல் உள்ளே இன்னமும் இருக்கணும்னு சொல்ற என அசல் கோலார் மற்றும் நிவாஷினியை பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடி போட்டு ஆடுவதை ரசிகர்கள் வாவ்.. வொண்டர்ஃபுல் என பாராட்டத்தான் போறாங்க என அசல் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











