பாலா நீ திருந்தமாட்டல? சனம் பத்தி பேசாம உன்னால இருக்க முடியாதுல? புரமோ பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 18ம் நாள் 3வது புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பாலாவை ஓட்டு ஓட்டென ஓட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பாலாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் வாய்க்கா தகராறு தான்.

ஆரம்பத்தில் சனம் ஷெட்டி பாகுபலி பாலாஜி என சுத்தி சுத்தி வந்த நிலையில், டுபாக்கூர் பிரச்சனையை கிளப்பி அவரை நீலாம்பரி ஆக்கிவிட்டார்.

வைரலாகும் புரமோ

வைரலாகும் புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட காலை 9 மணி முதல் வெளியாகும் ஒவ்வொரு பிக் பாஸ் புரமோவும் அன்றைய நிகழ்ச்சியை எப்படியாவது ரசிகர்களை பார்க்க வைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைத்து விட வேண்டும் என்பதற்காக பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் தெறிக்கிறது. பிக் பாஸ் எடிட்டருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகி விட்டனர். இன்றைய புரமோக்களும் பட்டாசை வெடித்து வைரலாகி வருகின்றன.

கான்சப்ட் கிடைக்கலையா பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 18ம் நாள் எபிசோடின் 2வது மற்றும் 3வது புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், என்ன பிக் பாஸ் கான்சப்ட் ஏதும் கிடைக்கலையா? இந்த பட்டிமன்றம் டாஸ்க் வைச்சு இன்றைக்கு நிகழ்ச்சி இருக்கும் போல, என பாயாசம் பாட்டியின் காமெடி காட்சியை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

சண்டையிலே பொறந்து

நான் எதுக்கெடுத்தாலும் உடனே ரியாக்ட் பண்ணிடுவேன் என சனம் ஷெட்டி இன்றைய பட்டிமன்றம் பேச்சில் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் "சண்டையிலே பொறந்து.. சண்டையிலே வாழும் சனம்" நிச்சயமாக இன்றைய நிகழ்ச்சி முடிவில் சனம் ஷெட்டி பெரியவரிடம் மன்னிப்பு கேட்டு, அடுத்த வாரம் அவருடனே டூயட் ஆடினாலும் ஆடலாம் என கலாய்க்கின்றனர்.

தாத்தா அடிச்சது தான் பிரச்சனை

நேற்றைய நாடா? காடா? டாஸ்க்கில் சனம் ஷெட்டிக்கு அடிச்சது பிரச்சனை இல்லை.. தாத்தா அடிச்சது தான் பிரச்சனை என இந்த பிக் பாஸ் ரசிகர் பங்கமாக மீம் போட்டு சனம் ஷெட்டியின் அராஜக போக்கை அழகாக கண்டித்துள்ளார். பாலாஜி அடிச்சிருந்தாலும் சனம் இந்த பிரச்சனையை பண்ணியிருப்பா என்றும் பலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

பாலா நீ திருந்தமாட்டல?

சிங்கம் சூர்யாவின் டோனில், பாலா நீ திருந்தமாட்டல? சனம் பத்தி பேசாம உன்னால இருக்க முடியாதுல்ல? என போட்டோ போட்டு வெறுப்பேற்றி உள்ளார் இந்த நெட்டிசன். பாலாஜி முருகதாஸின் முகத்திரையை இந்த புரமோவில் நம்ம ஜித்தன் ரமேஷ் கிழித்துத் தொங்கவிட்டதை தான் ஏகப்பட்ட நெட்டிசன்களும் நல்லா நோட் பண்ணி கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாலாஜிக்கு செருப்படி

சனம் ஷெட்டி வயசானவரை அவன், இவன், போடா, வாடான்னு பேசியதற்கு பட்டிமன்றம் போட்டியில் பாலாஜி சரியான பதிலடி கொடுத்தார். ஆனால், அந்த பாலாஜிக்கே ஜித்தன் ரமேஷ் சைலன்ட்டா செருப்படி கொடுத்தார் என்றும், இவ்வளவு நாள் எங்கேயா இருந்தா ரமேஷு என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எல்லாம் ஜெயில் தந்த பாடமோ?

பேரைக் கெடுத்துக்காத பாலாஜி

நேத்து அன்சீன்ல சம்யுக்தா கிட்ட சரியா பேசிட்டு, இப்போ சொதப்பிட்டீயே பாலாஜி.. தாத்தாக்கு முட்டுக் கொடுக்க உன் பேரைக் கெடுத்துக்காத பாலாஜி என இந்த பிக் பாஸ் ரசிகர் அட்வைஸ் பண்ணி உள்ளார். ஆனால், பாலாஜியின் ரசிகர்கள் நிச்சயம் இன்றைய ஷோவில் பாலாஜி கெத்துக் காட்டுவார் என்றே நம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X