எப்போ வருவீங்க கமல் சார்...ஒரே நாளில் பிக்பாஸ் ரசிகர்களை கதற விட்ட ராஜமாதா

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 50 வது நாள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கமலுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த வாரம் கமலால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது. அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

தொகுப்பாளரான ரம்யா கிருஷ்ணன்

நேற்றைய எபிசோடில், கமலே மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசி, தான் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார். அதன்படி ரம்யா கிருஷ்ணனும் போட்டியாளர்களை சந்தித்து, இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் பற்றி பேசினார். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய தன்னுடைய கருத்தையும் தெரிவித்தார்.

டிரெண்டிங்கில் ரம்யா கிருஷ்ணன்

டிரெண்டிங்கில் ரம்யா கிருஷ்ணன்

இந்நிலையில் ட்விட்டரில் பிக்பாஸ் சீசன் 5 தமிழ், ரம்யா கிருஷ்ணன் என்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகின. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணனை வரவேற்க தான் இந்த ஹாஷ்டேக் என நினைத்தால், காரணம் அது இல்லையாம். ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை விரும்பாமல் தான் நெட்டிசன்கள் இப்படி செய்துள்ளனராம்.

கமல் சார் எப்போ வருவீங்க

கமல் சார் எப்போ வருவீங்க

இந்த ஹாஷ்டேக்கில் ரம்யா கிருஷ்ணனை கிண்டல் செய்து பலர் கமெண்ட் செய்துள்ளனர். கமல் சார் எப்போ வருவீங்க என பெரும்பாலானவர்கள் கேட்க துவங்கி விட்டனர். கமல் தொகுத்து வழங்கும் போது பல நேரங்களில் போர் அடிக்கிறது. அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை என தோன்றியது. ஆனால் ரம்யா கிருஷ்ணன் நேற்று தொகுத்து வழங்கியதை பார்த்த பிறகு தான் கமல் சார் எவ்வளவு மெச்யூரிட்டியாக இதை கையாண்டிருக்கிறார் என தெரிகிறது. ஆண்டவர், ஆண்டவர் தான் என கமெண்ட் செய்துள்ளனர்.

சிபியை குறிவைத்த ரம்யா

சிபியை குறிவைத்த ரம்யா

மேலும் சிலர், ரம்யா கிருஷ்ணன் ஒரு தலைபட்சமாக பேசியதை போல் இருந்தது. அக்ஷராவிற்கு ஆதரவாக, அவரிடம் சாந்தமாக பேசிய ரம்யா கிருஷ்ணன், சிபியை குறிவைத்து பேசியதாக பலர் கூறி உள்ளனர். ஆண்டவர் இருந்தால் இதே வேற விதமாக கையாண்டிருப்பார். ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை பார்த்தால் சன் டிவி.,யில் அவர் பல ஆண்டுகளுக்கு முன் தொகுத்து வழங்கிய தங்க வேட்டை நிகழ்ச்சி தான் ஞாபகம் வருகிறது.

தெறிக்க விடும் மீம்கள்

தெறிக்க விடும் மீம்கள்

கமல் சார் சீக்கிரம் குணமாகி வர வேண்டும். மீண்டும் கமல் சார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். மீம் கிரியேட்டர்கள் ஒரு படி மேலே போய், பாகுபலி படத்தில் வெள்ளத்தில் மூழ்கும் முன் ரம்யா கிருஷ்ணன் குழந்தையை ஒரு கையால் தாங்கி பிடிக்கும் காட்சியை வைத்து, அந்த குழந்தைக்கு பதில் அக்ஷராவின் முகத்தை வைத்து மீம் தயார் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X