போடுற புரமோல வர சீனே காட்ட மாட்டுறாங்க.. விஜய் டிவி மீது கடுப்பான நெட்டிசன்ஸ்.. பறக்கும் மீம்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ம் தேதி கோலாகல துவக்க விழாவுடன் தொடங்கியது.
Recommended Video
தினமும் இன்றைய புரமோ என 4 புரமோக்களை விஜய் டிவி வெளியிடுகிறது.
ஆனால், நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு, அந்த புரமோ காட்சிகள் ஏதும் வராமல் வேற காட்சிகள் வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஹாட் ஸ்டார் பார்க்க வைக்க
பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே விஜய் டிவி ஒளிபரப்புகிறது. ஆனால், ஹாட் ஸ்டாரில் 1 மணி நேரம் 43 நிமிடங்களுக்கு ஒளிபரப்பு செய்கிறது. இதனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தான் அன்றைய எபிசோடின் மீதமுள்ள 40 நிமிட காட்சிகளை பார்க்கும் அளவுக்கு பிளான் பண்ணி பிசினஸ் செய்து வருகிறது விஜய் டிவி.

யாருடைய தப்பு
நேற்று காலை வெளியிட்ட எவிக்ஷன் புராசஸ் புரமோ சீனே இரவு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லை. முதல் புரமோவை காட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்து விட்டு, அதனை அடுத்த நாளைக்கு ஒளிபரப்பு செய்வது எந்த அளவுக்கு நியாயமான செயல் என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

அனிதா புரமோவும் காணல
மேலும், நேற்று அனிதா கேமரா முன்பு நின்று கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டையிட்ட புரமோ வெளியாகி வைரலானது. சுரேஷ் சக்கரவர்த்தி தான் புரமோவில் வரணும்னு இப்படியெல்லாம் பண்றாரு என்றார். அந்த சீனையும் நேற்றைய எபிசோடில் காணாத நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள், அதை கலாய்த்து மீம்களாக போட்டு வருகின்றனர்.

கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
அனிதா சம்பத்தின் சீன்கள் எல்லாம் புரமோவில் வந்து ரசிகர்களை நிகழ்ச்சியை காண ஆர்வம் கொள்ள செய்கின்றன. ஆனால், விஜய் டிவியில் வெளியிடும் எபிசோடுகளில் புரமோவுக்கும், நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்கிற குற்றச்சாட்டு அதிகளவில் எழுந்துள்ளது. புரமோல போடுறானே தவிர எபிசோடுல டெலிகாஸ்ட் பண்ண மாட்றானே என கலாய்த்து மீம்களை பறக்கவிடுகின்றனர்.

ஷாக்கான ரசிகர்கள்
விஜய் டிவி வெளியிடும் ஒவ்வொரு புரமோக்களாக பார்த்து விட்டு, இன்றைய நிகழ்ச்சி இப்படித் தான் சுவாரஸ்யமாக செல்லும் என நினைத்து அதனை பார்க்கும் ரசிகர்களுக்கு அல்வா கொடுப்பது போல விஜய் டிவி எல்லாத்தையும் கட் பண்ணி விடுவதை பார்த்து ரசிகர்கள் ஷக்காகி உள்ளனர். மேலும், சிலர் கண்டபடி திட்டித் தீர்க்கவும் தொடங்கி விட்டனர்.
View this post on InstagramA post shared by BiggBoss Bhajanaigal (@biggboss.bhajanaigal) on
பதறாத பதறாத
நேற்றைய எபிசோடில் தனுஷின் பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல் போட்டவுடன், மைக்கை கழட்டி வைத்து விட்டு, அனிதா சம்பத் ஆடியதை பார்த்த ரசிகர்கள் அதையும் சும்மா விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். "பதறாத.. பதறாத.. நீ ஆடுனதை எல்லோரும் கண்டிப்பா பார்ப்பாங்க" என அவரை விடாமல் பங்கம் பண்ணி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











