சாம்பாருக்கெல்லாம் சண்டையா? புறாவுக்கு போர் மாதிரி இருக்கே.. கலாய்த்துத் தள்ளும் ரசிகர்கள்!
சென்னை: காமெடி பண்ணா ராஜுவாகிடலாம், இலங்கைத் தமிழ் பேசினா லாஸ்லியா ஆகிடலாம், கத்தி பேசினா புரமோவில் வரலாம் என்பதை எல்லாம் இந்த 6வது சீசன் போட்டியாளர்கள் அபிஷேக் ராஜாவோட அதிக அனலைசிஸ் பண்ணி வந்திருப்பாங்க போல என நெட்டிசன்கள் இரண்டாவது புரமோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6ன் 3ம் நாள் இரண்டாவது புரமோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
அதற்கு கீழ் நெட்டிசன்கள் விஜே மகேஸ்வரியையும் தனலட்சுமியையும் எப்படி எல்லாம் கலாய்த்து உள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

ஜிபி முத்துவை கண்ணு தேடுது
"இந்தக் கூட்டத்தில் யாரு சத்தம் போட்டாலும் என் கண்ணு ஜிபி முத்து தான் தேடுகின்றது
அந்த அளவுக்கு ஜிபி முத்து மக்களை கவர்ந்து விட்டார்" என ஜிபி முத்துவின் தீவிரமான இந்த ரசிகர் அந்த புரமோவில் நடக்கும் சண்டை எல்லாம் முக்கியமில்லை என தனது ஒட்டுமொத்த சப்போர்ட்டையும் ஜிபி முத்துவுக்கு அளித்திருக்கிறார்.

ஜனனி காதலன்
ஜிபி முத்துவை தொடர்ந்து ஜனனியை தான் கமெண்ட்டுக்கு கீழ் வர்ணித்து வீடியோ மீம்களை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ஜனனியும் பிக் பாஸ் ரசிகர்களை பயங்கரமாக கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கத்தி பேசினா
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5 சீசன்கள் மற்றும் அல்டிமேட் என இதுவரை வெளியான 6 பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பார்த்து நோட் எடுத்து வைத்திருக்கும் போட்டியாளர்கள் பாலாஜி முருகதாஸ் போல கத்தி பேசினா புரமோவில் தெரிவோம் என இஷ்டத்துக்கு எப்போ பேசினாலும் கத்திப் பேச ஆரம்பித்து விடுகின்றனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இரிடேட்டிங் தனலட்சுமி
"அய்யோ இந்த தனலட்சுமியை பார்த்தாலே இரிடேட் ஆகுதே.. என்னவொரு ஆட்டிட்யூட் ச்சை" என நெட்டிசன்கள் தனலட்சுமியை திட்டித் தீர்த்து விஜே மகேஸ்வரிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சாம்பாருக்கு சண்டை
சாம்பாருக்கு ஒரு சண்டை என்றும் சாப்பிடும் விஷயத்துக்கு மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் லூசு என திட்டிக் கொள்கின்றனர் என விளாசி வருகின்றனர். கமல் சார் ஜிபி முத்துவுக்கு மட்டும் தப்பா பேசக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணீங்களே இவங்களுக்கு எல்லாம் இந்த வாரம் பண்ணுவிங்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமுதவாணனை தள்ளிவிட்ட ஜிபி முத்து
நீங்க எல்லாரும் தனலட்சுமி - மகேஸ்வரியோட இத்துப் போன சாம்பார் சண்டையைத் தான் பார்க்குறீங்க, ஆனால், அங்க ஜிபி முத்து அமுதவாணனை தள்ளி விட்டதை யாருமே பார்க்கல.. தனியா சம்பவம் செய்த தலைவன் என இந்த நெட்டிசன் புரமோவையும் ஜூம் போட்டு பார்த்து கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











