ரியல் புருஷனே இப்படி ஃபீல் பண்ண மாட்டாரு.. ஆளவிடுங்க ப்ரோ.. ராபர்ட் மாஸ்டர் அழுகை..காண்டான ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டார் என ராபர்ட் மாஸ்டர் புலம்புவதையே 3வது ப்ரோமோவாகவும் விஜய் டிவி வெளியிட்டு ராபர்ட் மாஸ்டரை இந்த வாரம் சேவ் செய்ய வைத்துள்ளது என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷனில் இடம்பெற்ற ராபர்ட் மாஸ்டர் தப்பிக்க என்னம்மா டிராமா போடுறாரு என நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
இன்றைய 2வது மற்றும் 3வது ப்ரோமோவை விஜய் டிவி மொத்தமாக ராபர்ட் மாஸ்டருக்கே குத்தகை விட்ட நிலையில், 24 மணி நேரத்தில் வேறு எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லையா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

எப்புடி டா பண்ற
வீக்கெண்ட் எஸ்கேப் ஆக பக்கா பிளான் போட்டாரு ராபர்ட் மாஸ்டர் என்றும், எப்புடி டா பண்ற என பிக் பாஸ் ரசிகர்கள் 3வது ப்ரோமோவில் ரச்சிதாவின் துரோகத்தால் ராபர்ட் மாஸ்டர் கதறி கதறி அழுத காட்சிகளை ரசிகர்கள் ட்ரோல் செய்து தொங்க விட்டு வருகின்றனர்.

வெரி பேட்
மேக்கப் கலைக்கணும், ஆயா மாதிரி இருக்கணும், கிழவி மேக்கப் போடணும், அவ்வை சண்முகி தோக்கணும், மேக்கப் இல்லாமல் பார்க்க முடியல, அவ மூஞ்சியே திருட்டு முழியா இருக்கே என ஷிவினை பார்த்து ராபர்ட் பேசியதை எல்லாம் மறக்கடிக்கத்தான் இந்த டிராமா. கமல் சார் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரை வெளுத்து வாங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பைத்தியக்காரனா நினைச்சிட்டு இருக்கல்ல
யோவ் ராபர்ட் மாஸ்டர் இன்னும் நீ எங்களை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல என டிக்கிலோனா காமெடி மீமை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். எப்படி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்டையும் ஏமாத்தி கேம் ஆடுறாரு பாருங்க வேறலெவல் மைண்ட் கேம் மாஸ்டர் என பாராட்டியும் வருகின்றனர்.

ஆள விடுங்க ப்ரோ
இந்த சீசன் பிக் பாஸ் பார்த்தா நிஜமாவே பைத்தியம் பிடிச்சிடும். நிஜ புருஷன் கூட இப்படி ஃபீல் பண்ண மாட்டாரு.. ஆள விடுங்க ப்ரோ என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வாரம் க்ரிஞ்ச் ஷோ காட்டி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் சேவ் ஆகிவிட்டார் என்றும் சிங்கப்பூர் பாப்பா நிவாஷினி தான் டாட்டா காட்டப் போகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











