Just In
- 13 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சனம் ஷெட்டி வெளியேற்றம்.. விஜய் டிவியை மீம் போட்டு விளாசித் தள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை: நம்பர் ஒன் இடத்துக்குத் தான் தகுதியானவர் என போட்டிப் போட்ட சனம் ஷெட்டியை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து விஜய் டிவி வெளியேற்றுகிறது என்ற தகவல் கசிந்த நிலையில், விஜய் டிவியை விளாசி ஏகப்பட்ட மீம்கள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் இருந்து 63வது நாளில் வெளியேறப் போவது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
வழக்கம் போல இந்த முறையும் யார் வெளியேறினார் என்பது லீக்காகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.
செம தில்லும்மா.. சிங்கக்குட்டிக்கு புட்டி பாலு.. சிங்கத்துக்கு மாமிசம் ஊட்டிவிடும் பிரபல நடிகை!

யாருக்கு மைண்ட் கேம்
பிக் பாஸ் நிகழ்ச்சி, உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு மைண்ட் கேம் கொடுக்கும் என்று பார்த்தால், வெளியே உள்ள ஆடியன்ஸுக்கு சும்மா வளைச்சு வளைச்சு மைண்ட் கேம் கொடுத்துக் கொண்டு வருகிறது. யார் வெளியே போவார் என ரசிகர்கள் நினைத்து, அவங்களுக்கு ஓட்டே போடாத நிலையில், அவர்களை எல்லாம் காப்பாற்றி கடுப்பேற்றுகிறது.

இந்த வாரம் இவர் தான்
இரண்டாவது வாரத்தில் வெளியேறிய நடிகை ரேகா முதல் கடந்த வாரத்தில் வெளியேறிய சம்யுக்தா வரை ஏகப்பட்ட பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது முன்னதாகவே சமூக வலைதளங்களில் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அது போல இந்த வாரம் சனம் ஷெட்டி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் எனும் உறுதியான தகவல் கசிந்துள்ளது.

ரசிகர்கள் கோபம்
ஷிவானி நாராயணன், ஆஜீத், அனிதா, ரம்யா, நிஷா என இந்த வாரம் இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதை கண்டித்து ரசிகரக்ள் விஜய் டிவியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் குழுவையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

மிக்சர் சாப்டுறவங்க
வொர்ஸ்ட் டா டேய்! என கேப்ஷன் போட்டு, இப்படி டிசர்விங் போட்டியாளர்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டு, மிக்சர் சாப்பிடுறவங்கள உள்ள வச்சி என்னையா சாதிக்க போற என விஜய் டிவியை விளாசி வருகின்றனர். கடைசியா எல்லாமே விஜய் டிவி புராடக்ட்ஸாவே இருக்கும் என்றே தெரிகிறது.

யாரு தங்கணும்
போனதுக்கும் போன வாரம் இதே போல யாரை தங்கணும்னு நினைக்கிறீங்க என கமல் கேட்ட போது, ஏகப்பட்ட பேர் சம்யுக்தாவுக்கு ஓட்டுப் போட்டனர். அதே போல இந்த வாரமும் கமல் கேட்கும் போது, ஆரி, ரம்யா, நிஷா, ரியோ மற்றும் அர்ச்சனா சனம் ஷெட்டியின் பெயரை தான் சொல்கின்றனர். ஆனால், வெளியேறப்போவது அவர் தன் என அடித்து சொல்லி வருகின்றனர்.

மனங்களை வென்ற சனம்
சனம் ஷெட்டி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்கிற உறுதியான தகவல் கசிந்த நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சனம் ஷெட்டி ஹாஷ்டேக் டிரெண்டானது. மக்களின் மனங்களை சனம் ஜெயித்து விட்டார் என போட்டு இருக்கும் மீம் நிஜமாவே வொர்த்.