அந்த அர்ச்சனா எஃப்.எம்.ஐ கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கப்பா… ஒய் பிளட்.. சேம் பிளட்.. சுச்சி பாவம்!

சென்னை: ஒரு மாசத்துக்கு அப்புறம் ஒரு சூர மொக்கையான எபிசோட் என்றால் அது நேற்றைய பிக் பாஸ் எபிசோட் தான்.

அதிலும் அந்த எஃப்.எம் ஸ்டேஷன் சீன் ரொம்பவே போரிங் என்றே சொல்லலாம்.

புது வரவு சுசித்ராவுக்கு ஸ்கோர் பண்ண கொண்டு வரப்பட்ட அந்த நிகழ்ச்சியையும் அவருக்கு விட்டு வைக்காமல் அர்ச்சனா அப்படி ஒரு ரம்பம் போட்டுட்டாங்க..

செம போர்

செம போர்

இதுவரை வந்த பிக் பாஸ் எபிசோடுகளில் இருந்ததை விட சூர மொக்கை போரிங் எபிசோடு என்றால் அது நேற்றைய பிக் பாஸ் எபிசோடு தான். சுண்டல் விக்கிற சீன்ல ஆரம்பிச்சு, தாத்தா தண்ணி ஊத்தி உப்பு போடாம சாப்பிட்டது, தமிழ் டாஸ்க், ரியோ - நிஷா வழக்கு, எஃப்.எம் டாஸ்க் என வச்சு செஞ்சிட்டாங்க

ரொம்ப லெந்தா போகுது

ரொம்ப லெந்தா போகுது

நீதிபதியாக சுசித்ரா சோபிக்க தவறியதால், அவருக்கு தெரிஞ்ச ஆர்.ஜே. வேலையை பண்ண சொல்லலாமே என பிக் பாஸ் அவரை காப்பாற்ற பிக் பாஸ் எஃப்.எம் கான்செப்ட்டை இறக்கினார். ஆனால், சுசித்ரா வாய் திறந்து ஒரு வார்த்தை பேசுவதற்குள், நம்ம உலக நாயகி அக்கா அர்ச்சனா ஓராயிரம் வார்த்தை பேசி அந்த எபிசோடையே போரிங் ஆக்கி விட்டார்.

இன்ட்ரோவில் உள்குத்து

இன்ட்ரோவில் உள்குத்து

பிக் பாஸ் போட்டியாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற பொறுப்பை தெரியாத்தனமாக சுசித்ரா அர்ச்சனாவிடம் கொடுக்க, மனசுல ஒவ்வொரு போட்டியாளர் மீதும் வச்சிருந்த அத்தனை வஞ்சத்தையும் இன்ட்ரோவிலேயே உள்குத்தாக வைத்து குத்தி விட்டார். யாருக்குமே சிரிப்பு வரலை.

பாலா ஷிவானியை நோண்டிஃபை

பாலா ஷிவானியை நோண்டிஃபை

சும்மா போற மாரியாத்தாவை.. என் மேல வந்து ஏறாத்தான்னு சொல்ற மாதிரி பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானியின் காதல் லீலைகளை போகிற போக்கில், கிடைத்த கேப்பில் வச்சு அடித்து விட்டு, தனது மனதின் பாரத்தை எல்லாம் இறக்கி விட்டார் அர்ச்சனா. அந்த ஒரு இடம் மட்டும் தான் கடைசியில் ஒரு செம மேட்டர் வெளியாக உதவியது.

ரேப்பிட் ஃபயர்

ரேப்பிட் ஃபயர்

பிக் பாஸ் வீட்டில் சுசித்ராவுக்கு ஸ்பேஸ் கொடுக்கப்பட்ட இடத்தில், புகுந்து விளையாடாமல் மொக்கையாக ரேப்பிட் ஃபயர் விளையாடி, உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், எந்த இயக்குநர் பிடிக்கும், என்ன பாடல் பிடிக்கும் என கேட்டு காதில் ரத்தம் வர வைத்து விட்டார்.

மொத்தமும் அன்சீன் தான்

மொத்தமும் அன்சீன் தான்

நேற்றைய பிக் பாஸ் ரஷ்ஷை பார்த்து நிச்சயம் எடிட்டர் டென்ஷன் ஆகி இருப்பார். மொத்தமும் அன்சீன்லயே வச்சிருந்திருக்கலாம். எல்லா குப்பைகளையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தூக்கிப் போட்டு, ரசிகர்களின் நேரத்தை ரொம்பவே வீணடித்து விட்டார்கள். ஃபன் இருக்கும் என சோமசேகர் சொன்னதுக்காக, அவரும் ரியோவும் கடைசியாக கலாய்த்த எஃப்.எம் ஸ்டேஷன் கொஞ்சம் பரவாயில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X