இது தான் உங்களோட கண்டிப்பா? பழகிப்போச்சு கமல்.. அடுத்தவாரம் அசீம் இன்னும் ஆடுவாரு.. ரசிகர்கள் கலாய்!

சென்னை: கடந்த வாரம் போட்டியாளர்களை வைத்து டம்மி ரெட் கார்டு கொடுத்த கமல் இந்த வாரமாவது அசீமுக்கு ரியல் ரெட் கார்டு கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோ ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அசீம் நான் உங்களை விமர்சிக்கல.. கண்டிக்கிறேன் என ஆவேசமாக கமல் சொன்னதை வரைக்குமாவது எடிட் பண்ணி போட்டிருக்கலாம்.

அடுத்ததாக உங்க மகனுக்காக என அப்படி பூசி மெழுக அசீமே சிரிக்கும் காட்சிகளை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் காண்டாகி விட்டனர்.

அசீம் ரீல் அந்துப்போச்சு

அசீம் ரீல் அந்துப்போச்சு

கடந்த வாரம் தனக்கே ரெட் கார்டு கொடுத்து தீயினால் சுட்டப்புண் திருக்குறள் எல்லாம் சொல்லி கமல்ஹாசனையே கன்ஃபியூஸ் செய்து இப்படி ஒரு நல்ல மனுஷன் உலகத்துலயே இல்லை என்பது போல நம்ப வைத்து எஸ்கேப் ஆனார். ஆனால், இந்த வாரம் மக மட்டமாக நடந்து கொண்ட அசீமின் செயல்களால் கடுப்பான கமல் "அசீம்.. நான் எதையும் கேட்க போறதில்லை.. நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்" என ஒரே போடாக போட்டு விட்டார்.

கண்டிக்கிறேன்

கண்டிக்கிறேன்

அடுத்தபடியாக தற்போது வெளியான 3வது புரமோவில் நான் உங்களை விமர்சிக்கல கண்டிக்கிறேன் என வெளுத்து வாங்கி உள்ளார் கமல். மற்றவர்களிடம் பாடி லேங்குவேஜ் காட்டி மாக் செய்வது எல்லாம் ரொம்பவே கேவலமான செயல் என கமலும் போட்டு வெளுத்து வாங்கிவிட்டார்.

இதுதான் கண்டிப்பா

இதுதான் கண்டிப்பா


3வது புரமோவில் நான் உங்களை கண்டிக்கிறேன் என கமல் சொன்னதுடன் எடிட்டர் கட் செய்யாமல் தனது வேலையை காட்டி கமல் சாரை மீண்டும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார். நான் உங்களை கண்டிக்கிறேன்.. உங்க மகனுக்காக என கமல் சேம் சைடு கோல் போட்டதும், அசீமே சிரித்து விட்டார். அப்பாடா நமக்கு ரெட் கார்டு இல்லை என்பதை புரிந்து கொண்டு.. இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்க கண்டிப்பா கமல் சார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பழகிடுச்சு

பழகிடுச்சு

அசீமை வறுத்தெடுத்து விட்டு அவரை இன்னும் வீட்டுக்குள்ளே கமல் வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இவரை அடுத்த பாலாஜி முருகதாஸாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல என நினைத்துக் கொண்டு பரவாயில்லைங்க பழகிடுச்சு என கமலையே கலாய்த்து வருகின்றனர்.

ஷோ ஓட வேண்டாமா

ஷோ ஓட வேண்டாமா

எங்க கைய வச்சி தள்ளினான் பாரு என கத்திய தனலட்சுமியே அசீமை மீண்டும் அண்ணா என சொல்லி விளையாடி வருகிறார். பிக் பாஸ் ஷோ ஓட வேண்டாமா அதற்குள் அசீமை வெளியே அனுப்பிட்டா வேற பிளேயர்களே இந்த சீசனில் இல்லையே என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X