என்னது சர்வாதிகாரமா? ஐஸ்வர்யா தத்தா இப்போ உள்ளே இருந்திருக்கணும்.. வீடே பத்திட்டு எரிஞ்சிருக்கும்!

சென்னை: இசைவாணி பொறுப்புடன் நடந்து கொள்வதையே சர்வாதிகாரம் என இமான் அண்ணாச்சி சுட்டிக் காட்டியதை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தேவையில்லாமல் எதையும் செலவு செய்யக் கூடாது என்றும், தனக்கு பிக் பாஸ் இந்த வாரம் கொடுத்த வேலையை மட்டும் தான் செய்கிறேன் என கெஞ்சும் விதமாகவே பேசி வரும் இசைவாணியை இப்படி இம்சை பண்ணக் கூடாது இமான் அண்ணாச்சி என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி உள்ளனர்.

மேலும், சர்வாதிகாரம் பண்ற மாதிரி இருக்கு என இமான் அண்ணாச்சி சொன்னதை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள் இப்போ மட்டும் ஐஸ்வர்யா தத்தா உள்ளே இருந்திருக்கணும் என ட்ரோல் மீம்களை குவித்து வருகின்றனர்.

அகல் விளக்காக

அகல் விளக்காக

நெருப்பு காயினை கையில் வைத்துக் கொண்டு வீட்டையே இசைவாணி கொளுத்தி வேற லெவலில் மிரட்டி இருக்கலாம். ஆனால், அவருடைய எளிமை மற்றும் நல்ல குணம் காரணமாக அகல் விளக்காக எரிந்து வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார்.

ஃப்ரிட்ஜை க்ளீன் பண்ண மாட்டாராம்

ஃப்ரிட்ஜை க்ளீன் பண்ண மாட்டாராம்

பிக் பாஸ் ஒருவருக்கு பவர் கொடுத்து மற்றவர்களை வேலை வாங்க சொல்லியிருக்கும் நிலையில், ராஜு பாய் சொல்வது போல தன் கை கால்களை அமுக்கி விட வேண்டும் என்றும் தனக்கு தேவையான வேலைகளை செய்ய வேண்டும் என்றும் இசைவாணி யாரிடமும் சொல்லவில்லை. ஃப்ரிட்ஜை க்ளீன் பண்ண சொன்னால் பண்ண வேண்டியது தானே அதை விட்டு விட்டு நெருப்பு பவர் வைத்திருக்கும் இசைக்கு அட்வைஸ் பண்ண நீங்க யாரு? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

என்னது சர்வாதிகாரமா

என்னது சர்வாதிகாரமா

இசைவாணி பிக் பாஸ் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமே சாதாரண உத்தரவுகளை போட்டதற்கே அவர் சர்வாதிகாரம் செய்கிறார் என இமான் அண்ணாச்சி எப்படி சொல்லலாம் என்றும் இந்நேரம் ஐஸ்வர்யா தத்தா மட்டும் உள்ளே இருந்திருக்கணும் என நெட்டிசன்கள் பிக் பாஸ் சீசன் 2 ராணி மகா ராணி டாஸ்க்கை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

தலையில் குப்பைக் கொட்டி

தலையில் குப்பைக் கொட்டி

காமெடி நடிகர் வயதில் மூத்த வையாபுரி தலையில் ராணி மகா ராணி டாஸ்க்கின் போது முழு சர்வாதிகாரியாக மாறிய ஐஸ்வர்யா தத்தா குப்பை கொட்டிய காட்சி மிகவும் பரபரப்பை கிளப்பியது. சர்வாதிகாரம்னா அதை சொல்லலாம் இசைவாணி செய்வதை எப்படி சொல்லலாம் என அண்ணாச்சியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஒருவாரம் ஐஸ்வர்யாவை அனுப்புங்க

ஒருவாரம் ஐஸ்வர்யாவை அனுப்புங்க

ஒரே ஒரு வாரம் மட்டும் ஐஸ்வர்யா தத்தாவை உள்ளே அனுப்புங்க பிக் பாஸ் அப்புறம் இந்த வீடே எப்படி பத்தி எரியுதுன்னு பாருங்க என வேற லெவலில் மீம்களை போட்டு இமான் அண்னாச்சியை வறுத்து எடுத்து வருகின்றனர். இசைவாணி ரசிகர்களின் அன்பையும் ஓட்டுக்களையும் அவரது செய்கையால் நிச்சயம் அள்ளி இருப்பார் என்பது இந்த வாரமும் அவர் முன்னதாகவே சேவ் ஆகும் போது ஹவுஸ்மேட்களுக்கு தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X