நீங்க ஏன் வந்தீங்க? அதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.. கிளம்புங்க அர்ச்சனா.. கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்களை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அன்போடு கேம் ஆடுறேன் என வார்த்தைக்கு வார்த்தை பொய் சொல்லாதீங்க என்றும் விளாசி வருகின்றனர்.

சிலர், உச்சகட்டமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தயவு செய்து அர்ச்சனாவை வெளியேற்றி விடுங்கள், அவரது மொக்கை கேமை பார்க்க முடியலை பிக் பாஸ் என்றும் புகார்களை அடுக்க தொடங்கி விட்டனர்.

ஜீ தமிழ் தொகுப்பாளினி

ஜீ தமிழ் தொகுப்பாளினி

சன் டிவி உள்ளிட்ட ஏகப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அர்ச்சனா, கடந்த சில ஆண்டுகளாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். ஏகப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அர்ச்சனா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மரண கலாய் வாங்கி வருகிறார்.

இவ்வளவு கீழ்த்தரமா

இவ்வளவு கீழ்த்தரமா

பிக் பாஸ் வீட்டில் அன்பு கொள்வதையே ஸ்ட்ராட்டர்ஜியாக பயன்படுத்தி கேம் ஆடிவருகிறார் அர்ச்சனா. அனிதாவை ஹக் பண்ணிவிட்டு வந்த ரியோவுக்கு ஸ்பிரே அடித்ததை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு கீழ்த்தரமாக ஏன் இருக்கிறீங்க என அர்ச்சனாவை வச்சு விளாசி வருகின்றனர்.

தக்காளி சட்னியா

தக்காளி சட்னியா

"யம்மா உனக்கு வந்தால் ரத்தம்!!! அதுவே அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா?" என கேள்வி எழுப்பியது மட்டுமின்றி அர்ச்சனா ஆயா என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 4 சீசனை மொத்தமாக மொக்கை ஆக்கியதே அர்ச்சனா தான் என்கிற குற்றச்சாட்டையும் ஏகப்பட்ட ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

சாமி மடம் அல்ல

சாமி மடம் அல்ல

"பிக்பாஸ் வீடு.. சாமி மடம் அல்ல.. தன் தனி திறமையால் போட்டியட வந்த ஒரு அப்பாவியை பாதை மாற்றுவது அன்பு அல்ல! 18 பேர் உள்ள இடத்தில் 6 பேர் மேல் மட்டும் அன்பு காட்டுவது அன்பு அல்ல! 6 பேர் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பதும் அன்பு அல்ல! 12 பேரை விரட்ட ளையாடுவது அன்பு அல்ல!" என அர்ச்சனாவுக்கு உண்மையான அன்பு பாடத்தை இந்த ரசிகை நடத்தி உள்ளார்.

நிறுத்துங்க உங்க அன்பு டிராமாவ

நிறுத்துங்க உங்க அன்பு டிராமாவ

அர்ச்சனா முட்டை மேல உட்கார்ந்து தான் முட்டை உடைஞ்சது. ஏற்கனவே பாலா உட்கார்ந்து முட்டை உடைஞ்சிருக்கு.. யாருமே தொட்டு முட்டை உடைஞ்சதே இல்லை. நிறுத்துங்க உங்க அன்பு டிராமாவை என அர்ச்சனாவை போட்டு விளாசி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

பழி போட்டுருப்பாங்க

பழி போட்டுருப்பாங்க

"அர்ச்சனா முட்டைல சோம் வச்ச கையை ஆரி அல்லது பாலா வச்சிருந்தா, அதை அர்ச்சனா எப்படி மாற்றி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன் uffff தலை சுத்திரிச்சு.. ஆரி வேணும்னு முட்டையை ஒடைச்சிட்டாருன்னு சொன்னாலும் பரவால்ல.. ஆரி முட்டைல மட்டும் கை வைக்கலனு, மீரா சேரனுக்கு போட்ட ஸ்கெட்ச்சை போட்டா? ஆரி உஷாரு பா" என இந்த நெட்டிசன் ஆரி சொன்ன பிசிக்கல் டச் விவகாரத்தை கையில் எடுத்து இருப்பார் என விவகாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

நீங்க ஏன் வந்தீங்க

நீங்க ஏன் வந்தீங்க

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் என அர்ச்சனா அழுது புலம்புவதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர். "நீங்க ஏன் வந்தீங்க அதைத் தான் நாங்களும் கேக்கிறோம்! இந்த வாரம் கிளம்புங்க! BGM போட்டு waste கொஞ்சம் கூட sympathy வரல எடிட்டர்.. செம.கடுப்புல இருக்கோம்!" என இந்த பிக் பாஸ் ரசிகை அர்ச்சனாவை டோட்டலாக க்ளோஸ் செய்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X