பாலாவுக்கு கேக் ஊட்டி விடும் ஆரி.. பயில்வான் பிறந்தநாள் கொண்டாட்ட புரமோவிலும் ஏறும் மைலேஜ்!

சென்னை: பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களைகட்ட போகுது என்பதை தற்போது வெளியான 3வது புரமோவில் பார்த்த ரசிகர்கள் அது தொடர்பான ரியாக்‌ஷன்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தினமும் பயில்வானை திட்டி கமெண்ட்டுகள் போடும் ரசிகர்களும், இன்னைக்கு அவரை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் ஆரி பாலாவுக்கு கேக் ஊட்டி விடும் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து ஆரியின் ஆர்மியினர் அவரது மைலேஜை ஏற்றி வருகின்றனர்.

ஹர்ட் பண்றியே

ஹர்ட் பண்றியே

"என்னாது பயில்வானுக்கு பிறந்தநாளா?... நல்வாழ்த்துகள் பயில்வான்!... ஆனா இங்கேயும் மற்றவர்களை ஹர்ட் பண்றியே" என ஹர்ட் பண்ணியிருந்தா சாரி கேட்டு விட்டு, திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன் என பாலா சொன்னதை குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

நிறைவா கிடைக்க

நிறைவா கிடைக்க

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி #BalajiMurugaDoss!!! எதுக்கு உள்ள போனியோ அது நிறைவா கிடைக்க வாழ்த்துக்கள்!" உள்ள இருக்க யாருமே கெட்டவங்க இல்ல! சில குறைகள் அவ்ளோதான்! Equality irrespective of gender or class அவ்ளோ தான் நான் எதிர்பார்க்கிறது.. நமக்கென்ன வாய்க்கா சண்டையா" என பாலா மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்பதை இந்த ரசிகை தெரிவித்துள்ளார்.

ஷிவானி ரியாக்‌ஷன்

ஷிவானி ரியாக்‌ஷன்

பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் என்றதுமே ஷிவானிக்கு அப்படியொரு சந்தோஷம் என்கிற ரீதியில் ஷிவானியின் ரியாக்‌ஷன் என நாட்டாமை டீச்சர் போட்டோவை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். வரவன் போறவன்லாம் என்னை கலாய்க்கிறாங்களேன்னு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் ஷிவானி புலம்புவாங்களோ!

தலைவன் தங்கம்யா

தலைவன் தங்கம்யா

என்னதான் பாலாவுக்கும், ஆரிக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை இருந்தாலும், பாலாவை ஆரிக்கும் ரொம்பவே பிடிக்கும். அதே போல தான், வீட்டுக்கு வெளியே நான் உங்களோட மிகப்பெரிய ஃபேன் என பாலாவும் சொல்லி உள்ளார். பாலாவுக்கு ஆரி கேக் ஊட்டி விடும் ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து அவரது ஆர்மியினர் தலைவன் தங்கம்யா என பாராட்டி வருகின்றனர்.

திட்ட விரும்பல

திட்ட விரும்பல

"இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்.. அதனால் உன்னை திட்ட விருப்பம் இல்லை.. வாழ்க பல்லாண்டு பாலாஜி.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி! என ஏகப்பட்ட ரசிகர்கள் பயில்வானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். கேமை கேமாக போட்டியாளர்கள் பார்ப்பது போலவே, நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை வைத்தே ரசிகர்களும் ட்ரோல் செய்வது ஆரோக்கியமான விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X