பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ்வின் தந்தை காலமானார்.. சோகத்தில் உறைந்த குடும்பம்!

சென்னை: பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ்வின் தந்தை காலமானார்.

Recommended Video

Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss

விளம்பர படங்களில் நடித்து வந்த ஆரவ், தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டிச் சென்றார்.

மார்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஆரவ்விற்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

பிக் பாஸ் டைட்டில் வின்னர்

விளம்பர மாடலாகவும் ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்த ஆரவ், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். ஆரவ்வின் அழகை பார்த்து ஏகப்பட்ட ரசிகைகள் அவருக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பித்தனர். 2017ம் ஆண்டு பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றார் ஆரவ்.

ஓவியாவுடன் காதல்

ஓவியாவுடன் காதல்

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவுடன் காதலில் விழுந்தார் ஆரவ். இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்பவே நேசித்தனர். மருத்துவ முத்த சர்ச்சைகள் எல்லாம் எழுந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இருவரும் பிரேக்கப் செய்தனர்.

ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

இயக்குநர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான ஆரவ், விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வின் பண்ண ஆரவ்விற்கு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன் திருமணம்

நடிகை ஓவியாவை ஆரவ் திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஹி என்பவரை இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆரவ்.

ஆரவ் அப்பா காலமானார்

ஆரவ் அப்பா காலமானார்

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் தந்தை டாக்டர் நிலாமுதீன் மாரடைப்பு காரணமாக காலமானார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர்களது சொந்த ஊரான நாகர்கோயிலில் இறுதிச்சடங்குகள் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

சமீபத்தில் தான் பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளரான நடிகை லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் கனடாவில் காலமானார். சமீபத்தில் தான் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஆரவ்வின் தந்தை காலமான செய்தி அவரது ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X