அய்யோ நாரிடுமே.. டாய்லெட்டுக்கு போகும் போது சோமை ஃப்ரீஸ் பண்ண பிக் பாஸ்.. ரம்யா, பாலா செம கலாய்!
சென்னை: அவசரமா டாய்லெட்டுக்கு போகும் போது சோமசேகரை ஃப்ரீஸ் பண்ண பிக் பாஸின் அட்டகாசம் நிறைந்த காட்சிகள் இன்றைய அன்சீன் புரமோவில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு நடக்குமா? நடக்காதா? என சந்தேகத்துடன் இருந்த ஃப்ரீஸ் டாஸ்க், ஒரு வழியாக இன்று முதல் ஆரம்பமாகிறது.
ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸை தொடர்ந்து சோமசேகரை பிக் பாஸ் ஃப்ரீஸ் செய்துள்ளார்.

அசையாம இருக்கணும்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது. ஷிவானி நாராயணன் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு ஏகப்பட்ட அறிவுரை சொல்லியதை இன்றைய புரமோவில் காண்பித்துள்ளனர். அடுத்ததாக பாலாஜிக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. ஃப்ரீஸ் டாஸ்க் சொன்னதும் போட்டியாளர்கள் அசையாம இருக்கணும்.

டாய்லெட்டுக்கு போகும் போது
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பிக்பாஸ் அன்சீன் புரமோவில், அவசர அவசரமா டாய்லெட்டுக்கு போக பாத்ரூம் ஏரியாவுக்குள் நுழைந்த சோமசேகரை அங்கேயே வைத்து பிக் பாஸ் ஃப்ரீஸ் செய்துள்ளது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்களும் விழுந்து விழுந்து சிரித்து விட்டனர்.

ரொம்ப அர்ஜென்ட்டா
ரியோ ராஜ் கிச்சன் ஏரியாவில் இருந்து கொண்டு, பாத்ரூம் போன இடத்திலேயே வச்சு சோமை ஃப்ரீஸ் பண்ணிட்டார் பிக் பாஸ் என கலாய்த்துக் கொண்டு இருக்க, சோம் அருகே வந்த ஆஜீத் ரொம்ப அர்ஜென்ட்டா என கிண்டல் பண்ணிவிட்டு நக்கலாக சிரிக்க ஆரம்பித்தார். வெட்கமே இல்லாமல், ரம்யாவும் அங்கே வந்து சோமை ஓட்ட ஆரம்பித்தார்.

டாய்லெட்ல போய்
மைக்கை கழட்டிவிட்டு டாய்லெட் போக இருந்த சோமை பிக் பாஸ் ஃப்ரீஸ் செய்ததும் அசையாமல் நின்ற சோமை பார்த்த ரம்யா பாண்டியன், யாராவது வரப் போறாங்க மாலை போட போறீங்களா என கேட்டுவிட்டு, டாய்லெட்ல போய்.. வெட்கமா இல்லை.. அய்யோ பாவம் என ரொம்பவே பங்கம் பண்ணி சிரிக்க ஆரம்பித்தார்.

வடிவேலுவான பாலா
ஆஜீத், ரம்யா வந்தால் அங்கே பாலா இல்லாமல் இருந்தால் எப்படி? உடனே ஆஜரான பாலா, வடிவேலு ஏய் படத்தில் சரத்குமாரை பார்த்து வடிவேலு ரியாக்ட் செய்வது போல செய்து ஒட்டுமொத்தமாக வச்சு செய்ய ஆரம்பித்தார். பாலா செய்த அட்டகாசத்தை பார்த்து, பிக் பாஸ் மீண்டும் செய்யுங்க பாலா என மறுபடியும் சோமசேகரை ஓவராக கலாய்த்து தள்ளினர்.

பிராங்கா பிக்பாஸ்
நிஜமாவே சோமசேகரின் உறவினர் அப்போது வந்தார்களா? இல்லை பிக் பாஸ் வேண்டுமென்றே சோமை பிராங்க் செய்தாரா என்பது தெரியவில்லை. நிஜமாவே சோமின் உறவினர்கள் வந்திருந்தால், அந்த காட்சியை காட்டி இருப்பார்கள், அதுவும் அன்சீன் புரமோவில் ஏன் போட வேண்டும், பிக் பாஸ் வீட்டில் காமெடியே இல்லாததால், பிக் பாஸ் ஏதோ ட்ரை பண்ணி இருக்கார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அய்யோ நாரிடும்
அர்ஜென்ட்டா டாய்லெட்டுக்கு போகும் போது இப்படி ஃப்ரீஸ் பண்ணுவது எல்லாம் நியாயமில்லை என்றும், சீக்கிரமா சோமை ரிலீஸ் பண்ணுங்க பிக் பாஸ், இல்லைன்னா ரொம்ப நாரிடும். இந்த வாரம் டாய்லெட் க்ளீனிங் யாருப்பா? என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அன்சீன் புரமோவுக்கு கீழே குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications