பார்ப்பதற்கு அலாவுதீன் பிரின்சஸ் ஜாஸ்மின் மாதிரியே இருக்குறீங்க... பிக் பாஸ் கேப்ரியலா!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கேப்ரியலா.
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி இப்பொழுது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கால் தடத்தைப் பதித்து சில படங்களில் நடித்து உள்ள கேப்ரியலா இப்பொழுது அலாவுதீன் பிரின்சஸ் ஜாஸ்மின் போல மின்னும் அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆகி உள்ளார்.

3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனும் தங்கையாக
ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் நாடி துடிப்பாக மாறியுள்ள கேப்ரியலா விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்படி முதன் முதலில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனும் தங்கையாக நடித்து இருப்பார்.

பள்ளி மாணவியாகவும்
3 படத்தில் மிகவும் குட்டி தங்கையாக நடித்த கேப்ரில்லா அதை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான அப்பா படத்தில் பள்ளி மாணவியாகவும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 3 மற்றும் அப்பா கேப்ரியலாவிற்கு திரைத்துறையில் நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றுத் தந்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி இளம் போட்டியாளராக
இந்த நிலையில் சென்ற ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாக களமிறங்கி அனைவரது மனங்களையும் வென்றார். ஆரம்பத்தில் சைலண்ட்டாக விளையாண்ட கேப்ரியலா போகப் போக அதிரடி ஆட்டத்தை விளையாடி வெற்றியாளருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றார் . இளம் வயதிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக நுழைந்து அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்ற பெயரையும் பெற்றார். இறுதி சுற்று வரை சென்று ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கடைசி நேரத்தில் வெளியாகி விளையாட்டில் மிகப்பெரிய திருப்புமுனை போட்டியாளராக மாறினார்.

அலாவுதீன் பிரின்சஸ் ஜாஸ்மின் போல பளபள அழகில்
இப்பொழுது சில முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் கதாநாயகியாகவும் வலம் வர உள்ளார். எல்லாவிதமான போட்டோஷூட்களிலும் கலக்கி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது இந்த நிலையில் இப்பொழுது அலாவுதீன் பிரின்சஸ் ஜாஸ்மின் போல பளபள அழகில் மின்னும் கேப்ரியலாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











