இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு… கேப்ரில்லாவை கிண்டலடித்த பிக்பாஸ் பிரபலம் !
சென்னை : பிக் பாஸ் பிரபலம் கேப்ரில்லா கிழிந்த ஜீன்சுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
இந்த புகைப்படத்தைப் பார்த்த பிக்பாஸ் போட்டியாளரான ரியோ, கேப்ரியல்லாவை ஏகத்திற்கும் கிண்டலடித்துள்ளார்.
மேலும் பலரும் கிழிந்த ஜீன்ஸ் குறித்து கேபியை கலாய்த்து வருகின்றனர்.

ஜோடி நம்பர் 1
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக விஜய் டிவில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர்1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன் மூலமே தனது அறிமுகத்தை இவர் சின்னத்திரையில் கொடுத்தார்.

கேபி
கேபி என்று ரசிகர்களால் அன்போது அழைக்கப்படும் கேப்ரியல்லா, இவர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வாய் பேச முடியாத தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சமுத்திரக்கனியின் திரைப்படமான அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

5 லட்சத்துடன் வெளியேறினார்
பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த வீட்டில் இவர் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. அவ்வப்போது சில சில சண்டைகள் வந்தாலும் இவர் அனைவரிடத்திலும் அன்பாகவே இருந்தார்.ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் இதில் தான் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த கேபி. கிடைத்த5 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

கிண்டலடித்த ரியோ
எப்போது இணையத்தில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிகின்றன. இந்நிலையில் கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிழிந்த ஜீன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரியோ, இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு கேபி என்று கிண்டலடித்துள்ளார். அதை பார்த்த கேபியின் தீவிர ரசிகர் ஒருவர் ஃபேஷன் என்று கேபிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











