பிக் பாஸ் கேபிக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என கோரிக்கை!
சென்னை: சினிமா நடிகர்களை தொடர்ந்து சின்னத்திரை கலைஞர்களுக்கும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.
Recommended Video
சுந்தரி சீரியல் கேபியை தொடர்ந்து பிக் பாஸ் கேபிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேபிக்கு கொரோனா
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட கேபிரியல்லாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹாய் மக்களே.. எனக்கும் கொரோனா உறுதியாகி விட்டது என தற்போது போஸ்ட் போட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

முரட்டு சிங்கிள்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் அழகு தேவதையாக கலந்து கொண்டார் கேபிரியல்லா. தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிசியாகி இருந்து வந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் ஜோடிகள்
ஷிவானியை போலவே கேபிக்கும் நடனம் என்றால் உயிர் தான். ஏற்கனவே 2009ம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற இவர், 2013ம் ஆண்டு நடைபெற்ற ஜோடி நம்பர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றார். இந்நிலையில், முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

மிகவும் பாதுகாப்புடனே இருந்தேன்
தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும், தன்னை கொரோனா தாக்கி விட்டதாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. நலமுடன் தான் உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











