அன்ஃபிட்னு சொல்லி குத்துறாங்க.. கதறி அழுத கேபி.. ‘பிஜி’ என புது டைட்டில் கொடுத்த பிக் பாஸ்!
சென்னை: கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற கேபி மொத்தமாக உடைந்து விட்டார்.
சிலர் தன்னை அன்ஃபிட் என சொல்வது ரொம்பவே வலிக்குது என்றும், நட்பு தனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று, பிடித்தவர்களுடன் நட்பாக இருப்பது, இங்கே ஸ்ட்ராட்டஜின்னு சொல்லப்படுவது ரொம்பவே வருத்தத்தை கொடுக்குதுன்னும் கேபி சொல்லி அழுதார்.
சில டைட்டில்கள் ரொம்பவே ஹர்ட் பண்ணுதுன்னு கேபி சொன்னதும், பிக் பாஸ் அவருக்கு 'பிஜி' என ஒரு புது டைட்டில் கொடுத்து வெளியே அனுப்பினார்.

அன்ஃபிட்னு குத்துறாங்க
கேபியை ரோபோ டாஸ்க்கில் ஆரி, நீங்க பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கே அன்ஃபிட்.. அன்ஃபிட் என சொன்னது அவரை ரொம்பவே பாதித்துள்ளது. கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற கேபியிடம் பிக் பாஸ் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்த உடனேயே இதை சொல்லி அழ ஆரம்பித்தவர் கடைசி வரை அழுது கொண்டே பேசினார்.

நட்புன்னா ரொம்ப பிடிக்கும்
அர்ச்சனா அன்பை அஸ்திரமாக்கி விளையாடுகிறார் என அவர் மீது எப்படி குற்றச்சாட்டுகள் எழுகிறதோ, அதே போல கேபி நட்பை பயன்படுத்துகிறார் என்று அவரை சிலர் பிளேம் செய்வதாக பிக் பாஸிடம் கூறி புலம்பி அழுதார். நட்புன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்சவங்க கூட ஃபிட்டாக இருப்பேன். ஆனால், அதையும் ஸ்ட்ராட்டஜி என்றும் சோலோவா விளையாடவில்லை என்றும் சொல்வது ரொம்பவே ஹர்ட் செய்கிறது என்றார்.

யாரை மிஸ் பண்றீங்க
உடனே இந்த 75 நாட்களில் யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று பிக் பாஸ் கேட்டதும், மேலும் கதறி அழ தொடங்கிய கேபி, அம்மா, நண்பர்கள் மற்றும் செல்ல நாய்க்குட்டியான தியாவை ரொம்பவே மிஸ் பண்றேன் பிக் பாஸ் என்றார். பிறந்தநாளைக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, தனது தியாவின் பாத அச்சு வைத்த கார்டு, கொஞ்சம் உணவு மற்றும் ஹவுஸ்மேட்களுக்காக கேக் வேண்டும் என்றார்.

டைட்டில் வைக்கிறாங்க
மேலும், இந்த பிக் பாஸ் வீட்டில் சில டைட்டில்கள் வைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றார் கேபி. ரியோ தான் முதலில் தன்னிடம் கிண்டலாக பேசி நட்பு பாராட்டினார் என்றும், அதன் பின்னர் தான் ரியோ மற்றும் சோமிடம் நெருங்கி பழகி வருகிறேன் என்றும் பேசினார். கிரிஞ்ச் கேபி என அவருக்கு டைட்டில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வைத்த டைட்டில்
கேபிக்கு ஆறுதல் சொன்ன பிக் பாஸ், தொடர்ந்து உங்களுடைய சூப்பரான கேமை விளையாடுங்க, மத்தவங்க பேசுறதை பத்தி கவலைப்படாதீங்க, நான் உங்களுக்கு ஒரு டைட்டில் வைக்கட்டுமா? என்றதும் சிரிக்க ஆரம்பித்தார் கேபி. வெளியே போய் தைரியமா சொல்லுங்க நீங்க ‘BG' என்று, அப்படின்னா என்ன பிக் பாஸ் என கேபி கேட்க, பிக் பாஸ் கேபின்னு சொல்லுங்க என்றார். வெளியே வந்ததும் ஹவுஸ்மேட்கள் மத்தியில் கேபி சொல்லி மறுபடியும் கலாய் வாங்கினார்.


Click it and Unblock the Notifications











