சிஷ்யனை உற்சாகப்படுத்திய குருநாதர்.. அதிரடியாக மாறுவாரா ஆரி.. கன்ஃபெஷன் ரூமில் நடந்தது என்ன?
சென்னை: அன்சீன் புரமோவில் காட்டப்பட்ட ஆரியின் அழுகை சீன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்ச்சியிலே இடம்பெற்றது.
கன்ஃபெஷன் ரூமில் ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து அழ வைத்து அனுப்பி வரும் பிக் பாஸ் இன்று ஆஜீத்திடமும் ஆரியிடமும் பேசினார். இதிலும் அவங்களை பிரிக்க முடியல..
ஆரியை சற்றே அழ வைத்த பிக் பாஸ், இன்னும் 30 நாள் கேமை எப்படி ஆட வேண்டும் என்கிற அட்வைஸை கொடுத்துள்ளார்.

கண்ணீர் ரூம்
கன்ஃபெஷன் ரூம் என்பதற்கு பதிலாக அதனை கண்ணீர் ரூம் என்று மாற்றி விடலாம். அதுதான் சரியாக இருக்கும். சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், அர்ச்சனா, அனிதா என ஏகப்பட்ட பேர் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத நிலையில், ஆரியையும் பிக் பாஸ் கன்ஃபெஷன் அறையில் அழ வைத்து விட்டார்.

ஆரி அழுதுட்டாரு
ஆஜீத்திடம் நடிப்பு பற்றி எல்லாம் பேசிய பிக் பாஸ், ஆரியிடம் உங்க என்டர்டெயின்மென்ட்டை எப்போ வெளியே கொண்டு வருவீங்க என்கிற கேள்வியை கேட்டு, ஆரியின் இரும்பு நெஞ்சை உடைத்து அழ வைத்து விட்டார். அர்ச்சனா அளவுக்கு ஆரி அழாமல், சில கண்ணீர் துளிகளை மட்டுமே சிந்தி, பின்னர் நார்மல் ஆனது ரசிகர்களுக்கு ஆறுதல்.

வொர்த்தான்னு தெரியல
இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு என்டர்டெயினரா உங்களை இன்னும் முழுமையா வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே, ஏன்? என ஆரியிடம் பிக் பாஸ் கேட்டதும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் ஃபிட்டானவனா என்றே தனக்கு தெரியவில்லை என கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார் ஆரி. மேலும், 70 நாட்கள் நல்லா விளையாடுனீங்கன்னு நீங்க சொன்னது மகிழ்ச்சி என்றார்.

அந்த மாதிரி காமெடி
நகைச்சுவை என்கிற பெயரில் மற்றவரை உடல் ரீதியாக கேலியாக பேசவும், மட்டம் தட்டவும் நேரிடும், ஆனால், நான் அவ்வாறு மற்றவர்களை காயப்படுத்த விரும்பல. அப்படி ஒரு என்டர்டெயின் பண்ண விரும்பல என்றார். அதன் பின்னர் பிக் பாஸ் கொடுத்த அட்வைஸை கேட்டு காமெடியாக ரசிகர்களை என்டர்டெயின் பண்ண முயற்சிப்பதாக கூறினார்.

சிஷ்யனும் குருநாதரும்
பிக் பாஸிடம் ஆரி பேசும் போது, சாண்டி மாஸ்டரை போலவே குருநாதா என பேசியதும், பதிலுக்கு பிக் பாஸும் சிஷ்யா, இன்னும் 30 நாள் தான் இருக்கு, இன்னும் சூப்பரா விளையாட வேண்டிய கட்டாயத்தில் நீ இருக்க, நல்லா விளையாடினால் கப் உனக்கு கிடைக்கும் என்பது போன்ற டிப்ஸை மறைமுகமாக சொல்லி ஆரியை உற்சாகப்படுத்தினார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











