அந்த பொண்ணுடன் டூயட் பாடியிருக்கிறேன்..தனலட்சுமி குறித்து பேசிய ஜிபி முத்து!

சென்னை : தனலட்சுமியுடன் டிக்டாக்கில் டூயட் பாடியிருக்கிறேன் என்று ஜிபி முத்து கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக சில நாட்களுக்கு பிறகு தான் சண்டை ஆரம்பிக்கும் ஆனால், பிக்பாஸ் டாக்ஸ் என்ற பெயரில் நைசாக கொளுத்தி போட்டதால் இரண்டாவது நாளிலேயே சண்டை வர ஆரம்பித்து விட்டது.

முதலில் வீட்டில் சண்டையை ஆரம்பித்தது அசீம் தான் அவர் தான் டீ வேண்டும் என்று கேட்டு மகேஷ்வரியிடம் சண்டை போட்டார். இதையடுத்து கிச்சன் கேப்டன் ஷிவின் கணேசன் தலையிட்டு சண்டையை நிறுத்தினார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

பொதுவாக பிக் பாஸ் ஆரம்பித்த சில வாரங்களில் தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்படும். ஆனால், ஜிபி முத்துவிற்கு பிக் பாஸ் தொடங்கும் முன்னரே ஆர்மிக்கள் தொடங்கி விட்டது. ஜிபி முத்து மற்றும் தனலட்சுமிக்கும் இடையே முட்டிக்கொண்டது. இதனால், ஜிபி முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமியை விஷபாட்டில் என்றும், தலைவர்கிட்ட வெச்சிக்காதே என்று திட்டி வருகின்றனர்.

அழுத அமுதவாணன்

அழுத அமுதவாணன்

நேற்று மதியம் தனலட்சுமியிடம் சாரி கேட்டதுக்கு என்னை பார்த்து மொறைக்குறாங்க என ஜி.பி முத்து சொல்ல, திரும்பி பார்த்தா அது மொறைக்குறதா? இது எல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியல. நடிக்காதீங்க நீங்க, என்ன எகிறிட்டு வரீங்க.. என தனலட்சுமி சண்டை போடும் பாணியில் கேட்டார். கோவபட்ட ஜி.பிமுத்து நான் நடிக்கிறனா என அழுது புலம்பினார்.

கதறி அழுத தனலட்சுமி

கதறி அழுத தனலட்சுமி

இதையடுத்து, ஜிபி முத்துவிடம் சண்டை போட்ட தனலட்சுமியை ஜனனி அனைவர் முன்நிலையிலையும் பங்கமாக அவமானப்படுத்தினார். அவர் வயதில் பெரியவர் அவர் வா...போ என்று சொன்னால் தப்பில்லை இதுக்காக அவரை நடிக்கிறீங்க என்று நீ சொன்னது தவறு என்றார். இதனால், கார்டன் ஏரியாவில் நான் ஏன் இங்கே வந்ததே தப்பு என்று கதறி அழுகிறார்.

டூயட் வீடியோ

டூயட் வீடியோ

இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியை தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தெரியும் என்று ஜிபி முத்து கூறினார். அந்த பொண்ணு ரொம்ப நல்ல புள்ள, டிக்டாக் பண்றப்போ தெரியும். இப்போது தெரிந்து அவரிடம் நான் பேசவில்லை. முன்பே இந்த பெண்ணை பற்றி தெரியும், டூயட் வீடியோ எல்லாம் செய்திருக்கிறேன் என்பதால் தான் அவரிடம் போய் பேசினேன். அந்த உரிமையில் தான் அவரிடம் வாமா போம்மா என பேசினேன்" என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X