GP Muthu New Car: கலக்குறீங்க தலைவரே.. 2வது கார் வாங்கிய ஜிபி முத்து.. என்ன விலை தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து புதிதாக இன்னொரு கார் ஒன்றையும் வாங்கிய வீடியோவை சற்றுமுன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கடந்த பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் அந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வாக்கவுட் ஆன ஜிபி முத்து அடுத்தடுத்து சில படங்களில் தலை காட்டி நடித்திருந்தார்.

அஜித்தின் துணிவு, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜிபி முத்து பாபா பிளாக் ஷீப் படத்தில் சிறப்பு விருந்தினராக கேமியோ ரோலில் நடித்து கலக்கி இருந்தார்.
பரம்பரையிலேயே முதல் கார்: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. இவர் தனது ஊரில் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். தனது பரம்பரையிலேயே முதல் நபராக கார் வாங்கியது நான் தான் என கடந்த 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கிய போது வீடியோ வெளியிட்டு பெருமையாக கூறியிருந்தார்.
புதிய கார் வாங்கிய ஜிபி முத்து: பிக் பாஸ் நிகழ்ச்சி, சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு, யூடியூப் வருமானம் என ஏகப்பட்ட விதத்தில் சம்பாதிக்க தொடங்கி உள்ள நடிகர் ஜிபி முத்து தற்போது புதிதாக வெள்ளை நிற Kia கார் ஒன்றை தனது குடும்பத்துடன் கார் ஷோருமுக்கு சென்று வாங்கிய வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், காரை வாங்கிக் கொண்டு அப்படியே குலதெய்வ கோயிலுக்குச் சென்று முதல் பூஜையை போட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டம் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
கார் விலை: பெரிய குடும்பம் ஜாலியாக எல்லா இடங்களுக்கும் சென்று வர வசதியாக உள்ள இந்த வெள்ளை நிற Kia காரின் விலை 12 முதல் 15 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











