VJ Paaru: மாஸ் என்ட்ரி கொடுத்த பார்வதி.. காதலை கொடுத்த வீடு.. உருக்கமான பேச்சு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9ல் சிறப்பாக விளையாடி வந்த பார்வதி ரெட் கார்டு பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டு உருக்கமாக பேசினார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரெட் கார்ட் பெற்று வெளியேறிய விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் அழைப்பிதழ் முறைப்படி கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கம்ருதீனை அழைத்த விஜய்சேதுபதி, ஆரம்பத்தில் இருந்து நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள், உங்களுக்கு ரெட் கார்ட் கொடுத்ததில் எனக்கு மிகவும் வருத்தம் என்றார். தொடர்ந்து பேசிய விஜய்சேதுபதி, கம்ருதீன், பார்வதி இருவரையுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தோம். ஆனால், பார்வதிக்கு முக்கியமாக வேலை இருப்பதால், அவர் வரவில்லை என கூறினார்.

விஜே பார்வதி: ஆனால், நிகழ்ச்சி முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பார்வதி மாஸாக என்ட்ரி கொடுத்தார். பார்வதி உள்ளே நுழைந்ததும் அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றன. இதனால் உற்சாகமடைந்த பார்வதி, அனைவரிடமும் நன்றி கூறினார். இதையடுத்து, நான் முதலில் சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த வீட்டை விட்டு நான் வெளியேறிய போது, மற்றவர்களை பற்றி நான் யோசிக்கவே இல்லை. இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என்ற வருத்தம் இருந்ததால், அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த பிக் பாஸ் வீடு, மகிழ்ச்சி, சந்தோஷம், கண்ணீர், காதல் என அனைத்தையும் எனக்கு கொடுத்து இருக்கிறது. இத்தனை நாட்கள் மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி என பார்வதி உருக்கமாக பேசினார். பின் மேடைக்கு வந்த சாண்ட்ரா, பார்வதியை கட்டி அணைத்து கொண்டார். இதை பார்த்த விஜய் சேதுபதி இருவரையும் மனதார பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











