Bigg Boss 7 - என் ரூல்ஸையே மீறுகிறீர்களா.. அங்கேயே போங்க.. விசித்திரா, யுகேந்திரனுக்கு பிக்பாஸ் அடித்த ஆப்பு

சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) விசித்திராவையும், யுகேந்திரனையும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.

கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் பிக்பாஸ் 7 போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த சீசன் தொடங்கியிருக்கிறது.

 Bigg Boss has sent Vichithra and Yugendran to the Small Boss house in Bigg Boss 7

இரண்டு வீடுகள்: இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அது எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், 18 போட்டியாளர்களில் பாதி பேர் ஒரு வீட்டிலும் மீதி பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு முதல் நாளே அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

முதல் ஆறு பேர்: அதன்படி, பவா செல்லதுரை, நிக்ஸன், அக்‌ஷயா, ரவீனா, அனன்யா, வினுஷா ஆகிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். அவர்களுக்கான ரூல்ஸ்படி, யாரும் அந்த வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; பாத்ரூம் க்ளினிங்கை அவர்கள்தான் செய்ய வேண்டும்; பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைக்க வேண்டும். அவர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது என்று ரூஸ்ல் போடப்பட்டிருந்தது.

மீறிய இரண்டு பேர்: சூழல் இப்படி இருக்க ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைத்துக்கொண்டிருக்கும்போது விசித்திராவும், யுகேந்திரனும் அவர்கள் அருகே சென்றார்கள். சென்றது மட்டுமின்றி சாம்பார் வைப்பதற்கு சில சில உதவிகளை விசித்திரா செய்தார். யுகேந்திரனோ டீ போட்டுக்கொண்டார். இதனை கேப்டனான விஜய் வர்மா ஆரம்பத்திலேயே தடுக்க முயன்றார்.

ஸ்மால் பாஸ் வீட்டில் 8 பேர்: இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 பேரை லிவிங் ஏரியாவுக்கு அழைத்தார் பிக்பாஸ். அப்போது அவர், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவக்கூடாது என்று சொல்லியும் விசித்திராவும், யுகேந்திரனும் உதவியிரு பிக்பாஸின் ரூல்ஸை மீறியிருக்கிறீர்கள். எனவே நீங்கள் இருவரும் தேவையான துணி, பொருட்களை எடுத்துக்கொண்டு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறி அதிர வைத்தார். இதனையடுத்து இரண்டு பேரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். இதனால் தற்போது அந்த வீட்டில் மொத்தம் 8 பேர் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X