பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த சிக்கல்.. நடு இரவில் வெளியேற்றப்பட்ட கழுதை.. முடிவுக்கு வந்த பிரச்சனை!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது. இதில், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பீட்டா அமைப்பு மூலம் சிக்கல் வந்ததை அடுத்து, பிக் பாஸ் டீம் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 17 சீசன்கள் முடிவடைந்து 18வது சீசன் அக்டோபர் 6ந் தேதி தொடங்கியது. இந்த 18வது சீசனையும் சல்மான் கானே தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 18 வது சீசனில், முதன் முதலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார்.

bigg boss season 18 salman khan donkey

இந்தி பிக் பாஸ் சீசன் 18: சுவாரசியமாக இருக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட, இந்தி பிக்பாஸ் வீட்டில், காதராஜ் என பெயரிடப்பட்ட கழுதை ஒன்று உள்ளது. கார்டன் ஏரியாவில் இருக்கும் கழுதையை குடும்பத்தில் இருப்பவர்கள் தினமும் குளிப்பாட்டி, அதற்கு தீணிப்போட்டு அதை பராமரிக்க வேண்டும் இது அவர்களுக்கு ஒரு வகையான டாஸ்க்.

பீட்டா அமைப்பு கடிதம்: டிவியில் இதைப்பார்த்து கடுப்பான பீட்டா அமைப்பு, பொழுது போக்கு நிகழ்ச்சியில் இது போன்று விலங்குகளை பயன்படுத்த வேண்டாம் என சல்மான் கானுக்கு கடிதம் எழுதியது. அதில், நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதை பார்த்த பொதுமக்கள் புகார் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கும் பீட்டா, கழுதையை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கழுதையை பயன்படுத்துவது நகைப்புக்குரிய விஷயம் கிடையாது என்றும், பிக்பாஸ் வீட்டில் எழுப்பப்படும் சத்தம், விளக்குகள் எல்லாம் கழுதையை பயமுறுத்தும் எனவும் பீட்டா அமைப்பு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த சிக்கல்: கழுதைக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து இரவோடு இரவாக கழுதை வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து கழுதையை வெளியில் அனுப்பிவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எந்த ஒரு ஜீவனும் துன்பப்படக்கூடாது என்று போராடிய அனைவருக்கும் நன்றி, உங்களின் உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X