Bigg Boss 18: டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார்? இந்தி பிக் பாஸின் சூப்பர் ஸ்டார் இவரா?
மும்பை: தமிழின் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கப்பட்ட அதே நாளில்தான் இந்தி பிக் பாஸ் சீசன் 18உம் தொடங்கப்பட்டது. இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்குபவர் சல்மான் கான். இதற்கு முந்தைய சீசன்களை விடவும் இந்த சீசன் முற்றிலும் வித்தியாசமாக மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக மாறிவிட்டது. குறிப்பாக இந்த சீசனில் தமிழ் நாட்டினைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலம், ஸ்ருதிகா அர்ஜுன் ராஜ் பங்கேற்றார். இவரது சுட்டித் தனம் ரசிக்கும்படியாக இருந்தது. இவர் பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து சக போட்டியாளர்கள் அனைவருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்தார். அதிலும் குறிப்பாக, பிக் பாஸ்க்கு திருக்குறள் கற்றுக் கொடுத்தார்.
இந்த சீசனும் இன்றுடன் நிறைவடைகின்றது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், இப்போது டாப் 6 போட்டியாளர்கள் கோப்பையைத் தட்டிச் செல்லும் முனைப்பில் உள்ளார்கள். அதாவது, மொத்தம் 17 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதில், விவியன் டிசேனா, கரண் வீர் மெஹ்ரா, ஈஷா சிங், ரஜத் தலால், சும் தரங் மற்றும் அவினாஷ் மிஸ்ரா என ஆறு பேருக்கு இடையில் கடுமையான போட்டி உள்ளது.

ஆறு போட்டியாளர்கள்: இதில் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு இருவருக்கு இருப்பதாக கூறப்படுகின்றது. அதுவும், ரஜத் தலால் மற்றும் விவியன் டிசேனா ஆகியோரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என கூறப்படுகின்றது. காரணம் இவர்களுக்குத்தான், சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு இருக்கின்றது. இதனால்தான் இவர்கள் இருவரில் யாராவது இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் விவியனுக்குத்தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக கூறப்படுகின்றது. அவரது பொறுமையான ஆட்ட அணுகுமுறை மற்றும் மிகவும் நேர்மையாக அனைவரிடமும் நடந்து கொண்டது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

டைட்டில் வின்னர்: ஜியோ சினிமாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் வாக்கெடுப்பில் விவியன் 44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ரஜத் தலால் 26 சதவீதமும் மற்றும் கரண் வீர் 24 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். ஜியோ சினிமா மட்டும் இல்லாமல் பல இந்தி சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் விவியன் தான் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். எனவே விவியன் தான் வெற்றியாளர் என கூறப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம் அனுமானங்களும் எதிர்பார்ப்புகளும்தான். உண்மையான வெற்றியாளர் யார் என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

பரிசுத் தொகை: இந்த கிராண்ட் ஃபினாலேவில் அக்ஷய் குமார் உள்ளிட்ட இந்தி பிரபலங்களும், சல்மான் கானின் அடுத்த படமான சிகிந்தர் படக்குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகின்றது. டைட்டில் வின்னருக்கு கோப்பை மற்றும் ரூபாய் 50 லட்சம் பணமும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது இல்லாமல் போட்டியாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











