ஆரி எல்லாரையும் குறை சொல்றாரு.. ஆனால், அந்த டாஸ்க்கில அவரு தான் கடைசி.. ஒரே குழப்பமா இருக்கே?

சென்னை: புரணி பேசும் போட்டியாளர்களுக்கு நேரடியாகவே ஒருவரை பற்றி குறை சொல்லும் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள்.

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்தே ஆரி குறை தான் சொன்னார் என ஆரியை பற்றி குறை சொல்லி சோமசேகர் முதலிடத்தை பிடித்து விட்டார்.

ஹவுஸ்மேட்கள் ஓட்டுப் போட்டு என்னைக்கு ஆரி ஜெயித்துள்ளார். இந்த குறை சொல்லும் டாஸ்க்கிலும் ஆரிக்கு கடைசி இடம் தான்.

குறை சொல்லும் டாஸ்க்

குறை சொல்லும் டாஸ்க்

ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற ஏகப்பட்ட போட்டிகள் இந்த வாரம் முழுக்க நடந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் குறை சொல்லும் டாஸ்க் ஹவுஸ்மேட்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆரி ஆரம்பித்து வைக்க, அடுத்து வந்த எல்லோரும் ஆரியை வைத்து செய்தனர்.

விஜய் டிவி மீது பழி

விஜய் டிவி மீது பழி

ஆரி எந்தவொரு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிலும் ஜெயிக்கவில்லை என்பதற்காக அவருக்காகவே குறை சொல்லும் டாஸ்க்கை விஜய் டிவி கொடுத்து அவருக்கு ஃபேவரிஸம் காட்டுகிறது என்கிற செம காமெடி பழியை பாலாஜி ரசிகர்கள் விஜய் டிவி மீது புரமோவை பார்த்தவுடனே போட்டனர்.

மட்டம் தட்டல

மட்டம் தட்டல

ஆரி மற்றவர்கள் மீது குறை சொன்னாலும், அவர்களை மட்டம் தட்டாமல், தூக்கி விடும் எண்ணத்திலேயே குறை சொல்கிறார் என்று அவரது ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகின்றனர். அதனால் தான் அவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாமினேஷன் நேரத்தின் போதும், ஆரியை வெளியேற்றவே மற்றவர்கள் துடித்தனர்.

மக்கள் சப்போர்ட்

மக்கள் சப்போர்ட்

எப்போ ஹவுஸ்மேட்கள் ஓட்டுப் போட்டு ஒரு விஷயத்தை முடிவு செய்ய சொன்னார்களோ, அப்போதே ஆரிக்கு கடைசி இடம் தான் கிடைக்கும் என்பது அவருக்கே தெரிந்த விஷயம் தான். நான் குறை சொல்றேன்னு சொல்லிட்டு, இப்போ எல்லாரும் என்னைய ரவுண்டு கட்டி குறை சொல்றாங்களே என ஒரு மதிப்பெண்ணை பெற்ற அவர், இந்த வீட்டில் எனக்கு சப்போர்ட் இல்லை என்றாலும், மக்கள் சப்போர்ட் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியது டாப் கிளாஸ்.

வெளியே போக ரெடி

வெளியே போக ரெடி

பிக் பாஸ் நிகழ்ச்சியே ரொம்ப அன்ஃபேராக இருக்கு என்பதை புரிந்து கொண்ட ஆரி, இனியும் பெரிதாக ஈடுபாடு காட்டி விளையாட தேவையில்லை என்கிற முடிவோடு தான் இந்த வாரம் விளையாடி வருகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடைசி இடத்தை ஆரிக்கு கொடுத்ததும் இந்த வீட்டில் இருந்து இந்த வாரம் அனுப்பினால், சந்தோஷமாக போகத் தயார் என்று சொல்லிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X